ஓபிஎஸ் சசிகலா இணைந்து அதிமுகவை வழி நடத்த தேவர் சமூகம் கடிதம்!

சென்னை (30 ஜூலை 2022): தேவர் சமூகம் ஒன்று கூடி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வி.கே.சசிகலா இணைந்து அதிமுகவை வழி நடத்திட வேண்டும் என தேவர் அமைப்பினர் கடிதம் எழுதியுள்ளனர். சுமார் 100 தேவர் அமைப்பினர் கைகோர்த்து ஓபிஎஸ், சசிகலா ஆகிய இருவருக்கும் கடிதம் அனுப்பியுள்ளனர். அதில், பாரம்பரியமாக தேவர் சமூகம் ஆதரித்து வந்த அதிமுகவை சசிகலா அணியுடன் மீட்டெடுக்க வேண்டும். அ.தி.மு.க.வுக்கு உயிர் கொடுத்ததே தேவர் சமுதாயம் என்றும், தலைவர்கள் ஒன்றிணைந்து, சிதைந்து போகாமல் கட்சியைக் கைப்பற்ற…

மேலும்...

முடிவுறும் தருவாயில் மல்லிப்பட்டினம் மனோரா சிறுவர் பூங்கா பணிகள்!

பட்டுக்கோட்டை (29 ஜூலை 2022): தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த மனோரா சுற்றுலா தளத்தின் சிறுவர் பூங்கா புதுப்பிக்கும் பணி முடிவுறும் தருவாயில் உள்ளது. மனோரா மல்லிப்பட்டினம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ளது. இங்கு பல சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கி.பி 814ல் மாவீரன் நெப்போலியனை ஆங்கிலேயர்கள் விழ்த்தியதன் நினைவாக ஆங்கியர்களின் நண்பன் மராட்டிய மன்னன் இரண்டாம் சரபோஜி, நினைவு சின்னமாக கட்டியதுதான் மனோரா. சித்திலமடைந்த மனோராவில் மராமத்து பணிகள் நடைபெற்றதால் 5 வருடங்களாக…

மேலும்...

மோடிதமிழகம் வருகை – போலி செய்திகளை வெளியிட்ட மீடியாக்கள்?

சென்னை (27 ஜூலை 2022): பிரதமர் மோடி நாளை தமிழகம் வரவுள்ள நிலையில் மோடிக்கு எதிராக சமூக வலைதலங்களில் பதிவிட்டால் நடவடிக்கை எடுக்கபடும் என்று காவல்துறை அதிகாரி கூறியதாக முன்னணி செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த செய்திகள் முற்றிலும் தவறானது என திமுக தரப்பினர் விளக்கம் அளித்து வருகின்றனர். சென்னை மகாபலிபுரத்தில் ஜூலை 28 ஆம் தேதி, செஸ் ஒலிம்பியட் போட்டி நடைபெறவுள்ளது. இதன் தொடக்கவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள பிரதமர்…

மேலும்...

மேலும் ஒரு மாணவி பள்ளி விடுதியில் தற்கொலை!

திருவள்ளூர் (25 ஜூலை 2022): திருவள்ளூர் அருகே கீழச்சேரியில் செயல்படும் அரசு உதவிபெறும் பள்ளியில் +2 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருத்தணி அருகேயுள்ள தெக்கலூர் பகுதியைச் சேர்ந்த மாணவி, கீழச்சேரியில் செயல்படும் ஒரு அரசு உதவிபெறும் பள்ளி விடுதியில் தங்கி +2  படித்துவந்தார். இன்று காலை வழக்கம்போல பள்ளிக்கு கிளம்பிய மாணவி, உடன் இருந்த மாணவர்கள் காலை உணவு அருந்தச் சென்ற நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ…

மேலும்...

பாட புத்தகங்களோடு நல்லடக்கம் செய்யப்பட்ட ஸ்ரீமதியின் உடல்!

கள்ளக்குறிச்சி (23 ஜூலை 2022): மாணவி ஸ்ரீமதியின் உடல் அவரது பாட புத்தகங்களுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது காண்போரை கண் கலங்க வைத்தது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பயின்று வந்த மாணவி ஸ்ரீமதி, கடந்த 13ம் தேதி மரணமடைந்தார். மாணவி மரணத்தில் மர்மம் இருந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டினர். மரணத்திற்கு நீதி கேட்டு நடந்த போராட்டம் கலவரமாக வெடித்தது. இதில் 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். கோர்ட்டு உத்தரவால் மாணவியின் உடல் மறுகூறாய்வு செய்யப்பட்டது….

மேலும்...

கோவை ஈஷா யோகா மையத்தில் இளைஞர் தற்கொலை!

கோவை (22 ஜூலை 2022): கோவை ஈஷா யோகா மையத்தில் ஆந்திராவை சேர்ந்த இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரமணா (28) என்ற இளைஞர் கோவை ஈஷா யோகா மையத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலை செய்துகொண்ட இளைஞரின் உடலைக் கைப்பற்றி கோவை ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும்...

கள்ளக்குறிச்சி விவகாரத்தால் விடுமுறை விட்ட பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து – மெட்ரிக் இயக்குனரகம் எச்சரிக்கை!

சென்னை (21 ஜூலை 2022) : கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக தன்னிச்சையாக வேலைநிறுத்தம் செய்த பள்ளிகள் கூடுதலாக ஒரு நாள் பள்ளியை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், மாணவி மரணம் தொடர்பாக நடந்த கலவரத்தில், தனியார் பள்ளி சூறையாடப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்து, தனியார் பள்ளி சங்கங்கள் சார்பில், 18ம் தேதி திடீர் வேலைநிறுத்தம் நடத்தப்பட்டது. இதில் மாநிலம் முழுதும், 987 மெட்ரிக் பள்ளிகள் இயங்கவில்லை. இந்த விவகாரத்தில், தன்னிச்சையாக விடுமுறை அறிவித்ததற்கு விளக்கம் கேட்டு, தனியார்…

மேலும்...

சர்ச்சைக்குரிய கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் நடந்த ஆர் எஸ் எஸ் பயிற்சி முகாம்!

கள்ளக்குறிச்சி (18 ஜூலை 2022): மாணவி மர்மமான முறையில் இறந்த கள்ளக்குறிச்சி பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம் நடைபெற்ற திடுக்கிடும் தகவல் அம்பலமாகியுள்ளது. கள்ளக்குறிச்சியை அடுத்த சின்ன சேலத்தில் சக்தி இண்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ., பள்ளியில் பயின்ற மாணவி மர்மமான முறையில் இறந்ததை அடுத்து, அங்கு நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது. இந்த வன்முறையின் பின்னணியில் உள்ளவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். இதற்கிடையே இந்த வன்முறையின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த…

மேலும்...

கள்ளக்குறிச்சி கலவரம் – பரபரப்பு பின்னணி!

கள்ளக்குறிச்சி (17 ஜூலை 2022): கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே பிளஸ்-2 மாணவி ஸ்ரீமதியின் மரணம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மாணவி ஸ்ரீமதி விடுதியின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டாலும், பிரேத பரிசேததனை அறிக்கையில், மாணவி ஸ்ரீமதி இறப்பதற்கு முன் அவரது உடலில் காயங்கள் இருந்ததாகவும், மாணவியின் உடைகளிலும் ரத்த கறைகள் இருந்தன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. மாணவி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பெற்றோர்…

மேலும்...

ஓ.பன்னீர்செல்வம் மருத்துவமனையில் அனுமதி!

சென்னை (16 ஜூலை 20222): முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் அதிகரித்து வந்த கொரோனா தொற்று பரவல் கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இந்நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

மேலும்...