முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி!

சென்னை (14ஜூலை 2022): கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஸ்டாலின் கொரோனா பாதிப்பால் தன்னை தானே தனிமைப்படுத்திக்கொண்டார். இந்நிலையில் சி.டி ஸ்கேன் பரிசோதனைக்காக சென்னை காவேரி மருத்துவமனைக்கு ஸ்டாலின் சென்ற நிலையில் தற்போது அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும்...

பிளஸ் டூ விடைத்தாள் நகல் – இணையதள த்தில் இன்று பதிவிறக்கம் செய்யலாம்!

சென்னை(14 ஜூலை 2022): பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் நகலை, இன்று இணையதளத்தில் பதிவிறக்கலாம். அரசு தேர்வுத் துறை இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்டுள்ள அறிவிப்பில், பிளஸ் 2 பொது தேர்வு விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பித்தவர்கள், இன்று பகல் 12:00 மணி முதல், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.

மேலும்...

அரசு பேருந்துகள் தனியார்மயமாக்கப்படுமா? – அமைச்சர் பதில்!

பெரம்பலூர் (14 ஜூலை 2022) : அரசு பேருந்துகள் தனியார் மயமாக்கப்படுமா? என்ற கேள்விக்கு அமைச்சர் சிவசங்கர் பதிலளித்தார். பெரம்பலுார் மாவட்டம், மேல உசேன் நகரம் கிராமத்தில், 1.28 கோடி ரூபாய் மதிப்பிலான மறு சீரமைப்பு குடிநீர் திட்டப்பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில், தமிழக போக்கு வரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பங்கேற்றார்.பின், நிருபர்கலிடம் பேசிய அவர், தமிழக முதல்வர் அறிவித்தபடி, அரசு போக்குவரத்து கழகத்துக்கு புதிதாக, 2,000 பேருந்துகள் வாங்குவதற்கான பணிகள் துவங்கியுள்ளன. அரசு பேருந்துகள்…

மேலும்...

ஓபிஎஸ்சுக்கு ஆப்பு வைத்த நீதிமன்றம்!

சென்னை(11 ஜூலை 2022): அதிமுக பொதுக் குழு நடத்த தடை இல்லை என ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இன்றைய தினம் அதிமுக பொதுக் குழு கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரும் மனு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கட்சியின் உள்விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது. அதிமுக விதிகளின்படி பொதுக் குழுவை நடத்திக் கொள்ளலாம். மேலும் 82 சதவீதம் பேர் பொதுக் குழுவை கூட்ட கோரிக்கை விடுத்ததால் கட்சி உள்கட்சி…

மேலும்...

ஒன்றிய அமைச்சர் பதவியிலிருந்து முக்தார் அப்பாஸ் நக்வி ராஜினாமா!

புதுடெல்லி (07 ஜூலை 2022): பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய சிறுபான்மை விவகாரத் துறை அமைச்சரான முக்தார் அப்பாஸ் நக்வி, ஒன்றிய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜ்யசபா பதவிக்காலம் இன்று முடிவடைய உள்ள நிலியில் ஒரு நாள் முன்னதாக, நேற்று அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார் இது குறித்த கூட்டத்தில், ஒரு அமைச்சராக நாட்டிற்கும் அதன் மக்களுக்கும் நக்வி ஆற்றிய பங்களிப்பிற்காக பிரதமர் மோடி நக்வியை பாராட்டினார். நக்வியுடன், ராம் சந்திர பிரசாத்…

மேலும்...

ஜாதியை சுட்டிக்காட்டி இளையராஜாவை அவமானப்படுத்திய பாஜக!

புதுடெல்லி (07 ஜூலை 2022): இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவி வழங்கப்படுவதாக குடியரசுத்தலைவர் அறிவித்துள்ள நிலையில் இது குறித்த அறிவிப்பில் இளையராஜாவை ‘தலித்’ என குறிப்பிட்டு பாஜக அரசு இளையராஜாவை அவமானப்படுத்தியுள்ளது. இளையராஜாவுக்கு எம்பி பதவி வழங்கப்பட்டதற்கு முதல்வர் ஸ்டாலின்,பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் அதேவேளை சமீபத்தில் பிரதமர் மோடியை டாக்டர் அம்பேத்கருடன் ஒப்பிட்டு இளையராஜா ஒரு புத்தகத்தில் எழுதியிருந்தார். இதற்கான பரிசுதான் எம்பி பதவி என நெட்டிசங்கள் கருத்து தெரிவித்து…

மேலும்...

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எம்பி பதவி – பிரதமர் மோடி அறிவிப்பு!

புதுடெல்லி (06 ஜூலை 2022): இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவி வழங்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இளையராஜாவின் படைப்பு மேன்மை தலைமுறைகளைக் கடந்து மக்களை மகிழ்வித்திருக்கிறது எனவும் மோடி தெரிவித்துள்ளார். சமீபத்தில் பிரதமர் மோடியை டாக்டர் அம்பேத்கருடன் ஒப்பிட்டு இளையராஜா ஒரு புத்தகத்தில் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும்...

உதய்ப்பூர் வன்செயல் – திருமாவளவன் கண்டனம்!

சென்னை (30 ஜூன் 2022: உதய்ப்பூர் கண்ணையா லால் படுகொலை சம்பவம் குறித்து விசிக தலைவர் திருமாவளவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: இஸ்லாத்தின் பெயரால் நடக்கும் இதுபோன்ற கொடூரங்களை இஸ்லாமியச் சமூகம் ஒருபோதும் ஏற்காது என்பதை அறிவோம். நுபுர் சர்மாவும் சனாதன பயங்கரவாத அரசியலின் விளைச்சல்தான். எனவே அழித்தொழிக்கப்பட வேண்டியது நபர்களல்ல; வெறுப்பை விதைக்கும் பயங்கரவாத கோட்பாடே ஆகும். நபிகள் நாயகத்தை இழிவுப்படுத்துவது என்பது இஸ்லாமியச் சமூகத்தைச் சீண்டி வம்பிழுக்கும்…

மேலும்...

அதிமுகவிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி நீக்கம் – போஸ்டரால் பரபரப்பு!

மதுரை(28 ஜூன் 2022): அதிமுகவிலிருந்து எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் நீக்கம் செய்யப்பட்டதாக ஒபிஎஸ் ஆதரவாளர் வெளியிட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் ஓபிஎஸ் க்கும் இபிஎஸ் க்கும் இடையே ஒற்றை தலைமை போட்டி நிலவி வருகிறது. இது அதிமுக தொண்டர்களிடையே குழப்பத்தை ஏறப்படுத்தியுள்ளது. இந்நிலையில் இபிஎஸ் இன் ஒற்றை தலைமை முயற்சிக்கு எதிராக ஒபிஎஸ் தேர்தல் ஆணையத்தை நடியுள்ளார். இதற்கிடையே ஒபிஎஸ் ஆதரவாளர் வெளியிட்டுள்ள போஸ்டர் மதுரை முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது. அதில் எடப்பாடி பழனிச்சாமி, கேபிமுனுசாமி,ஜெயக்குமார்…

மேலும்...

தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ் மனு – எடப்பாடி வீட்டில் ஆலோசனை!

சென்னை (24 ஜூன் 2922) : ஜூலை 11ல் அதிமுக பொதுக்குழு கூடுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு எதிராக அதிமுக ஒருங்கிணைப்பாளர். ஓ. பன்னீர்செல்வம் தலைமை தேர்தல் ஆணையத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். ஜூலை 11ல் நடக்கவுள்ள பொதுக்குழு குறித்து எடப்பாடி பழனிசாமி வீட்டில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, கே.சி.வீரமணி, பா.வளர்மதி, கே.பி.அன்பழகன், பொள்ளாச்சி ஜெயராமன், வைகைச்செல்வன் உள்ளிட்டோரும் ஆலோசனையில் ஈடுபட்டனர். நேற்று (ஜூன் 23) நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தமிழ்மகன் உசேன் அவைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும்,…

மேலும்...