எம்ஜிஆர் பெயரில் திருத்தம் – செம கோபத்தில் அதிமுகவினர்!

சென்னை (30 மார்ச் 2022): எம்ஜிஆர் பெயருக்கு முன்னாள் உள்ள புரட்சித்தலைவர் நீக்கப்பட்டதால் அதிமுகவினர் திமுக அரசு மீது கடும் கோபத்தில் உள்ளனர். மறைந்த முன்னாள் முதலமைச்சரும், அஇஅதிமுக நிறுவனத் தலைவரும், புரட்சித் தலைவர் என அழைக்கப்படுபவருமான டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரனின் நூற்றாண்டு விழாவை ஒட்டி, கடந்த அஇஅதிமுக ஆட்சியில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பெயரை, புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் என பெயர் மாற்ற, அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,…

மேலும்...

முதியவர்களை கொடூரமாக தாக்கிய பாஜகவினர்!

புதுச்சேரி (29 மார்ச் 2022): மகன் வாங்கிய கடனை திருப்பிக் கேட்டு பாஜகவினர் முதியவர்களை தாக்கிய சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி லாஸ்பேட்டை நாவற்குளம் பகுதியில் மனைவுயுடன் மளிகை கடை நடத்தி வருபவர் குமரேசன்(65), இவரது இரண்டாவது மகன் கணேஷ்குமார் செய்து வந்த தொழிலில் நஷ்டம் அடைந்தது .மேலும் கணேஷ்குமார் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார், அவர் கருவடிக்குப்பத்தில் சேர்ந்த பா.ஜ.க பிரமுகர் பிரகாஷ் என்பவரிடம் கடன் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. கொடுத்த பணத்தை அப்போது பிரகாஷ்…

மேலும்...

லுலு குழுமம் தமிழகத்தில் ரூ.3,500 கோடி முதலீடு – முதல்வர் ஸ்டாலினுடன் நடந்த பேச்சுவார்தையில் முடிவு!

துபாய் (28 மார்ச் 2022): கேரளாவைச் சேர்ந்த என்ஆர்ஐ தொழிலதிபர் எம்.ஏ.யூசுப் அலியின் பல பில்லியன் டாலர் மதிப்புள்ள லுலு குழுமம் தமிழகத்தில் ரூ.3,500 கோடி முதலீடு செய்யவுள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் துபாயில் நடைபெற்ற தமிழக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட குழுமத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான எம்.ஏ.யூசுப் அலி இதனைத் தெரிவித்தார். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நான்கு நாள் சுற்றுப்பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளார். அங்கு பல்வேறு முதலீட்டாளர்களை சந்தித்து பேச்சுவார்த்தை…

மேலும்...

அண்ணாமலை ஒரு தகுதியற்றவர் – நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பளீர்!

சென்னை (28 மார்ச் 2022): தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக பட்ஜெட்டில் ஏதேனும் தவறு இருப்பதாக கருதினால் அது அறியாமை என்றும் நான் பொய் சொல்வதாக நினைத்தால் நீதிமன்றத்தை நாடலாம் எனவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்துள்ளார். தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டை கண்டித்து வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்நாடு மாநில பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அண்ணாமலை தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை கடுமையாக விமர்சித்தார். அவர்…

மேலும்...

எலக்ட்ரிக் பைக் வெடித்து தந்தை மகள் பலி!

வேலூர் (26 மார்ச் 2022): வேலூரில் எலக்ட்ரிக் பைக் வெடித்து தந்தை மகள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். வேலூர் சின்ன அல்லாபுரம் பகுதியைச் சேர்ந்த துரை வர்மா (49) மற்றும் அவரது மகள் ப்ரீத்தி (13) இருவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, வீட்டின் வெளியில் வைக்கப்பட்டிருந்த எலக்ட்ரிக் பைக் திடீரென வெடித்துச் சிதறியது. இதனால் அருகில் இருந்த மற்றொரு வாகனமும் தீ பிடித்துள்ளது. இதனை அடுத்து வீட்டினுள் இருந்த தந்தை மகள் இருவரும் வெளியில் வரமுடியாத அளவில்…

மேலும்...

இன்றும் அதிகரித்த பெட்ரோல் டீசல் விலை – பொதுமக்கள் கவலை!

சென்னை (25 மார்ச் 2022): பெட்ரோல் டீசல் விலை இன்றும் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியும் கவலையும் தெரிவித்துள்ளனர். நாட்டின் பல்வேறு மாநிலங்களில் எப்போதும் இல்லாத வகையில், பெட்ரோல், டீசல் விலை லிட்டர் தலா, 100 ரூபாயை தாண்டி விற்பனையானது. இதனால், வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். சரக்கு வாகனங்களின் வாடகை கட்டணம் உயர்ந்ததால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில்…

மேலும்...

மீண்டும் கும்பல் கும்பலாக தமிழகத்திற்கு அகதிகளாக வரும் இலங்கையர்கள்!

சென்னை (24 மார்ச் 2022): இலங்கையில் விடுதலைப்புலிகள் உடனான போரின் போது, தமிழர்கள் அகதிகளாக தமிழ்நாட்டுக்கு வந்ததைப் போல, சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு பொருளாதார நெருக்கடி காரணங்களால், தமிழகத்திற்கு வரத் தொடங்கியுள்ளனர். மன்னார் பகுதியில் இருந்து கைக்குழந்தையுடன் 6 பேர் தனுஷ்கோடிக்கு வந்த நிலையில், வவுனியா பகுதியிலிருந்து மேலும் 10 பேர் வந்துள்ளனர். இந்நிலையில், இலங்கைக்கு அருகாமையில் உள்ள ராமேஸ்வரம் அடுத்த, மண்டபம் அகதிகள் முகாமில் இலங்கையில் இருந்து வரும் அகதிகளை தங்க வைப்பதற்காக தற்காலிக…

மேலும்...

ஓபிஎஸ் குறித்து சசிகலா கூறிய வார்த்தை!

சென்னை (23 மார்ச் 2022): என்னைப்பற்றி ஓபிஎஸ் உண்மையைத்தான் கூறியுள்ளார் என்று சசிகலா தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் விசாரணைக்காக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த இரண்டு நாட்களாக ஆஜரானார். இரு நாட்களிலும் சுமார் 9 மணி நேரம் ஓ.பன்னீர்செல்வத்திடம் விசாரணை நடைபெற்றது. விசாரணையில் பரபரப்பான பல்வேறு வாக்குமூலங்களை அவர் அளித்தார். பின்னர் ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் கேட்ட கேள்விகளுக்கு உண்மையான பதிலை…

மேலும்...

பெட்ரோல் டீசல் விலை இன்றும் உயர்வு -பொதுமக்கள் அதிர்ச்சி!

சென்னை (23 மார்ச் 2022): பெட்ரோல், டீசல் விலை நேற்று உயர்த்தப்பட்ட நிலையில், இன்றும் மீண்டும் அதிகரித்துள்ளது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் எப்போதும் இல்லாத வகையில், பெட்ரோல், டீசல் விலை லிட்டர் தலா, 100 ரூபாயை தாண்டி விற்பனையானது. இதனால், வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். சரக்கு வாகனங்களின் வாடகை கட்டணம் உயர்ந்ததால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்தது. இந்நிலையில், கடந்த 137 நாட்களாக விலையில் மாற்றம் இன்றி விற்பனை செய்யட்டு வந்த பெட்ரோல்,…

மேலும்...

அப்போது ஒரு பேச்சு இப்போது ஒரு பேச்சு – அந்தர் பல்டி அடித்த ஓபிஎஸ்!

சென்னை (22 மார்ச் 2022): ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக விமர்சித்து வந்த ஓ.பன்னீர் செல்வம் திடீரென அப்படி எந்த சந்தேகமும் இல்லை என்று கூறியுள்ளார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் நேற்றும் இன்றும் ஓபிஎஸ் ஆஜராகி பதிலளித்து வந்தார். இந்நிலையில் விசாரணையின் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம், ஆணையத்தில் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்துள்ளேன். உண்மையை ஆணையம் கண்டறிய வேண்டும். என்றார். மேலும் சசிகலாவை ‘சின்னம்மா’ என்று அழைத்த ஓபிஎஸ்,…

மேலும்...