மத நல்லிணக்கத்திற்கு மற்றொரு உதாரணம் மறைந்தது!

மதுரை (13 ஆக 2021): ஆன்மீகத் தலைவர்களில் ஒருவரான மதுரை ஆதீனம் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவருக்கு வயது 77. சுவாசப் பிரச்னையால் அவதிப்பட்ட மதுரை ஆதீனம், கடந்த 9 ஆம் தேதியன்று மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மதுரை ஆதீனம், இன்று இரவு 9.15 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார். தமிழகத்தில் உள்ள தொன்மையான சைவ மடங்களில் மதுரை ஆதீனமும் ஒன்று. இதன் தலைவராக…

மேலும்...

முன்னாள் அமைச்சரின் வங்கி கணக்கு மற்றும் வங்கி லாக்கர்கள் முடக்கம்!

சென்னை (12 ஆக 2021): முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வாங்கிக் கணக்கு மற்றும் லாக்கர் முடக்கபப்ட்டுள்ளன. சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் ரூ.811 கோடிக்கு டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதாக அளித்த புகாரின்பேரில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்பட 7 பேர் மீதும், 10 நிறுவனங்கள் மீதும் ஊழல், மோசடி உள்ளிட்ட 7 பிரிவுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவருடைய சகோதரர்களான அன்பரசன், செந்தில்குமார், மற்றும்…

மேலும்...

அதிமுக முன்னாள் அமைச்சர் வீடு உட்பட 55 இடங்களில் அதிரடி ரெய்டு!

சென்னை (10 ஆக 2021): அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வீடு உட்பட 55 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். முன்னாள் அதிமுக உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி, அரசு ஒப்பந்தப் பணிகள் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1.2 கோடி மோசடி செய்துவிட்டதாக எஸ்.பி.வேலுமணி மீது திருவேங்கடம் என்பவர் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெறுவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் கோவை, குனியமுத்தூர் சுகுணாபுரம் பகுதியில்…

மேலும்...

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பாஜகவில் அடைக்கலம்!

சென்னை (09 ஆக 2021); கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திரபாலாஜி. சிவகாசி சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவர், கடந்த தேர்தலில் படுதோல்வி அடைந்தார். மேலும், திமுகவை தரக்குறைவாகவும் பாஜகவின் அமைச்சர் போன்றே மோடியை அளவுக்கு அதிகமாக புகழ்ந்து பேசிவந்த அவர், தேர்தல் முடிவுக்குப் பின்னர் மிக அமைதியானார். தான் முன்னர் பேசியதற்கு கூட வருத்தம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு டெல்லி சென்ற அவர், அங்கேயே தங்கியுள்ளார். இதற்கிடையே, அவர் பாஜகவில்…

மேலும்...

நள்ளிரவில் கூடும் தமிழக சட்டப்பேரவை!

சென்னை (09 ஆக 2021): சுதந்திர தினத்தன்று நள்ளிரவில் சட்டப்பேரவையில் சுதந்திர தின கொண்டாட்டம் நடத்த தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தில் தமிழ்நாடு அரசின் கோட்டை கொத்தளத்தில் முதன்முறையாக தேசிய கொடியை ஏற்றி நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்துகிறார் மு.க. ஸ்டாலின். அவரது உரையில் பல முக்கிய அறிவிப்புகள் வரலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த நிலையில், சுதந்திரத் தினத்தின் 75வது ஆண்டு என்பதால், ஆகஸ்ட் 15ஆம்…

மேலும்...

நடிகை மீரா மிதுன் மீது 7 பிரிவுகளில் வழக்கு!

சென்னை (08 ஆக 2021): நடிகை மீரா மிதுன் மீது ஏழு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பட்டியலின் சமூகத்தினரை பற்றி சமூக வலைத்தளங்களில் இழிவாக பேசியதாக நடிகை மீரா மிதுன் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறையில் நேற்று (07/08/2021) புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் நடிகை மீராமிதுன் மீது கலகத்தைத் தூண்டும் வகையில் பேசுதல், வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட…

மேலும்...

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் தொடர்ந்து அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா!

சென்னை (07 ஆக 2021): தமிழ்நாட்டில் நேற்றைய பாதிப்பை விட இன்று கொரோனா தொற்று சற்று குறைந்துள்ளது. அதேவேளை 5 மாவட்டங்களில் தொடர்ந்து சதமடித்துக் கொண்டு உள்ளது. தமிழ்நாட்டில் தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கையும், கடுமையான ஊரடங்கு காரணமாக கொரோனாவின் இரண்டாவது அலை சற்று குறைத்தது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1,969 பேருக்கு கொரோனா பாதிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும்…

மேலும்...

கத்தார் வழியாக சவூதி செல்லும் இந்தியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்!

தோஹா (04 ஆக 2021): தற்போது சவூதி அரேபியாவிற்கு செல்வோர் நேரடியாக செல்லமுடியாத நிலை உள்ளது. எனவே சவூதி அரேபியா பயணத் தடை செய்யாத மூன்றாவது நாட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருந்த பின்னரே சவூதி செல்ல முடியும். இந்நிலையில் தற்போது இந்தியர்கள் சவூதி செல்ல வழித்தடமாக கத்தாரை தேர்ந்தெடுக்கின்றனர். அதேவேளை கத்தார் வழியாக வருபவர்கள் கத்தார் மற்றும் சவுதி அங்கிகரித்த இரண்டு டோஸ் தடுப்பூசி பெற்றிருக்க வேண்டும். மேலும் கத்தாரில் தங்குவதற்கு ஏஜெண்டுகள் நீண்ட கால…

மேலும்...

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

சுமத்ரா (03 ஆக 2021): இந்தோனேசியாவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் தெற்கே சுமத்ராவில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 6.1 ஆக பதிவாகி உள்ளது என ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது. இந்நிலநடுக்கம் இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள மென்டவாய் தீவு அருகே சுங்கா பெனு நகரின் தென்மேற்கே 191 கி.மீ. தொலைவில் 40 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும்...

கருணாநிதிக்காக தமிழகம் வரும் குடியரசுத்தலைவர்!

சென்னை (02 ஆக 2021): இன்று தமிழகம் வரும் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழகத்தில் 5 முறை முதல்-அமைச்சராகவும், 80 ஆண்டுகள் பொது வாழ்க்கையில் இருந்தும், பல அழியாத முத்திரைகளை பதித்த மறைந்த கலைஞர் கருணாநிதியின் திருவுருவப்படத்தை திறந்து வைக்கிறார். தமிழக சட்டமன்றத்தில் என்றென்றும் மறக்க முடியாத அவரது உரைகள், நிறைவேற்றிய திட்டங்கள், எப்படி அரசுகளுக்கு வழிகாட்டியாக திகழ்கிறதோ, அதுபோல இனி சட்டமன்றத்தில் அவரது திருவுருவப்படம், அங்கு அமர்ந்திருக்கும், எதிர்காலத்தில் அமரப்போகும் உறுப்பினர்களுக்கு பாடமாக விளங்கும். தமிழக…

மேலும்...