யோகா கண்டுபிடிக்கப்பட்டபோது, இந்தியாவே இல்லை – நேபாள பிரதமர் பரபரப்பு கருத்து!

காத்மண்டு (22 ஜூன் 2021): கா கண்டுபிடிக்கப்பட்டபோது, இந்தியா உருவாக்கப்படவில்லை. என்றும் நேபாளில் தான் யோகா கண்டுபிடிக்கப்பட்டது என்று நேபாள நாட்டின் பிரதமர் கே.பி. சர்மா ஓலி. பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார். நேற்று (21.06.2021) சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி சிறப்புரையாற்றிய கே.பி. சர்மா ஓலி, யோகாவையும் தங்கள் நாட்டுக்குச் சொந்தமானது என கூறியுள்ளார். இதுதொடர்பாக கூறிய அவர், , “இந்தியா ஒரு தேசமாக உருவாவதற்கு முன்பே, நேபாளத்தில் யோகா பயிற்சி செய்யப்பட்டது. யோகா கண்டுபிடிக்கப்பட்டபோது,…

மேலும்...

இந்த பாதிப்பு வந்தால் கொரோனா வராதாம்!

நியூயார்க் (17 ஜுன் 2021): சாதாரண சளி, காய்ச்சல் ஏற்படுவதால் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பு கிடைக்கக் கூடும் என்று அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து “ஜர்னல் ஆப் எக்ஸ்பரிமென்ட் மெடிசன்’ என்ற மருத்துவ அறிவியல் இதழில் வெளியான அந்த ஆய்வு தொடர்பான கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:- யேல் மருத்துவக் கல்லூரி பேராசிரியர் எலன் பாக்ஸ்மேன் தலைமையில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், சாதாரண சளி மற்றும் காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ் தொற்று ஒருவருக்கு ஏற்படும்போது, அந்தத் தொற்றை…

மேலும்...

பாகிஸ்தான் தயாரிக்கும் கொரோனா தடுப்பூசி!

இஸ்லாமாபாத் (02 மே 2021): பாகிஸ்தானில் தயாரிக்கும் கொரோனா தடுப்பூசிக்கு பாக்வாக் என் பெயரிடப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் சீனா உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த தடுப்பூசிநேற்று (01.06.2021) அறிமுகம் செய்யப்பட்டது. விரைவில் இந்த தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. ஏற்கனவே பாகிஸ்தானில் சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ள தடுப்பூசியை பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும்...

மாஸ்க் தேவையில்லை – குறையும் கொரோனா – சாதித்த அரசு!

நியூயார்க் (23 மே 2021):கொரோனா பரவல் தொடர்ந்து குறைவதால் அமெரிக்கா கொரோனாவுக்கு முந்தைய நிலையை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது. 2 டோஸ் தடுப்பூசிகளை எடுத்துக் கொண்டவர்கள் பொது இடங்களில் மாஸ்க்குகளை அணியத் தேவையில்லை என அரசு அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு உலகிலேயே கொரோனாவால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா இருந்தது. அமெரிக்காவில் தற்போது வரை 3.38 கோடி பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கொரோனாவால் ஆறு லட்சத்திற்கும் அதிகமான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன ஆனால்…

மேலும்...

ஜான்சன் அண்ட் ஜான்சன் கோவிட் தடுப்பூசி போடுவதை நிறுத்தி வைக்க உத்தரவு!

நியூயார்க் (13 ஏப் 2021): அமெரிக்காவில் ரத்த உறைவு ஏற்படுவதாக வந்த தகவலை அடுத்து ஜான்சன் அண்ட் ஜான்சனின் ஒற்றை-டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசியை உடனடியாக நிறுத்துமாறு மத்திய சுகாதார நிறுவனங்கள் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளன. அமெரிக்காவில் ஆறு பேருக்கு ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி பெற்ற பிறகு இரத்த உறைவு ஏற்பட்டதாக கூறப்பட்டது இதனை அடுத்து அதனை நிறுத்தி வைக்க அமெரிக்க சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவில் ஏறக்குறைய ஏழு மில்லியன் மக்கள் இதுவரை ஜான்சன் அண்ட் ஜான்சன்…

மேலும்...

நடுக்கடலில் சிக்கிய எவர் கிரீன் கப்பல் மீட்பு!

கெய்ரோ (29 மார்ச் 2021): எகிப்து சூயஸ் கால்வாயில் சிக்கிய எவர்கிரீன் கப்பல் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவில் இருந்து 18,300 கண்டெய்னர்களுடன் எவர் கிரீன் என்ற கப்பல் கடந்த 22 ம் தேதி சூயஸ் கால்வாய் வழியாக நெதர்லாந்து சென்று கொண்டிருந்தது. அச்சமயத்தில் கால்வாய் பகுதியில் ஏற்பட்ட பலத்த காற்று காரணமாக கப்பல் கால்வாயின் குறுக்காக சிக்கிக்கொண்டது. உலக கப்பல் போக்குவரத்தில் 15% இந்த சூயஸ் கால்வாய் வழியாக தான் நடக்கிறது. தற்போது சீன சரக்கு…

மேலும்...

மியான்மரில் ஒரே நாளில் குழந்தைகள் உட்பட 114 பேர் சுட்டுக் கொலை!

மியான்மர் (28 மார்ச் 2021): மியான்மரில் நேற்று ஒரே நாளில் 114 பேர் ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். மியான்மரில் கடந்த மாதம் 1-ந்தேதி ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்து விட்டு ராணுவம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. அப்போது முதல் அந்த நாட்டு மக்கள் ராணுவ ஆட்சிக்கு எதிராக தினம்தோறும் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். மக்களின் இந்த தன்னெழுச்சி போராட்டத்தை ராணுவம் ஒடுக்கி வருகிறது. இந்நிலையில் மியான்மரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில்…

மேலும்...

ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு!

டோக்கியோ (20 மார்ச் 2021): ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டள்ளது. மேலும் அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் மியாகி மண்டலத்திற்கு அருகே உள்ளூர் நேரப்படி மாலை 6 மணி 9 நிமிடத்துக்கு 6.9 என்கிற அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலப்பகுதியை ஒட்டிப் பசிபிக் பெருங்கடலின் கீழ் 73 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜெர்மனியைச் சேர்ந்த புவியியல் ஆய்வுத்துறை முதல் தகவலாக தெரிவித்தது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவில் 7.0 ஆக…

மேலும்...

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா தொற்று!

இஸ்லாமாபாத் (20 மார்ச் 2021): பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவரது மருத்துவர் ஃபைசல் சுல்தான் அறிவித்துள்ளார். மேலும் இம்ரான்கான் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் ஃபைசல் சுல்தான் தெரிவித்தார். பாகிஸ்தானிலும் கொரோனா பரவல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அண்மையில் பிரதமர் இம்ரான்கான்ன் கொரோனா தடுப்பூசியும் போட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்...

சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் 25 பேர் பலி – 40 பேர் தப்பியோட்டம்!

ஹைதி (27 பிப் 2021): ஹைதி நாட்டில் சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். 400க்கும் அதிகமானோர் தப்பியோடியுள்ளனர். ஹைதி நாட்டின் தலைநகரான போர்ட்-அவ்-ப்ரிண்சின் வடகிழக்கு பகுதியில் க்ரோஸ்-டிஸ்-பவ்க்யூட்ஸ் சிவில் சிறைச்சாலை உள்ளது. அந்த சிறைச்சாலையில் கொலை, கொள்ளை உள்பட பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அந்த சிறைச்சாலையில் கடந்த வியாழக்கிழமை திடீரென கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் கைதிகளுக்கும் சிறைக்காவலர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கலவரத்தை கட்டுப்படுத்த முயற்சி மேற்கொள்ளபட்டபோதும்…

மேலும்...