இஸ்லாமாபாத் (20 மார்ச் 2021): பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவரது மருத்துவர் ஃபைசல் சுல்தான் அறிவித்துள்ளார்.
மேலும் இம்ரான்கான் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் ஃபைசல் சுல்தான் தெரிவித்தார்.
பாகிஸ்தானிலும் கொரோனா பரவல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அண்மையில் பிரதமர் இம்ரான்கான்ன் கொரோனா தடுப்பூசியும் போட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.