முதல்வர் எடப்பாடியின் தாயார் மரணம்!

சேலம் (13 அக் 2020): முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் தவசாயி அம்மாள் (93) உடல் நலக்குறைவால் உயிரிழந்தார் தவசாயி அம்மாள் கடந்த வெள்ளிக்கிழமையன்று முதுகு தண்டுவடம் பாதிப்பு காரணமாக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை அதிகாலை 1.30 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். இதனையடுத்து அவரது உடல் சேலம் மாவட்டம் சிலுவம்பாளையம் கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. தாயாரின் மறைவு செய்தியறிந்து முதலமைச்சர்…

மேலும்...

டிக் டாக் செயலிக்கு பாகிஸ்தானிலும் தடை!

இஸ்லாமாபாத் (10 அக் 2020): டிக் டாக் செயலிக்கு பாகிஸ்தான் அரசும் தடை விதித்துள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளில் ‘டிக் டாக்’ பயன்படுத்தப்பட்டு வருகிறது. இளம் வயதினர் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள வீடியோ செயலியில், அநாகரிகமான பதிவுகளும் வெளியிடப்படுவதாக அவ்வப்போது குற்றச்சாட்டு எழுவது உண்டு. அந்த வகையில், டிக் டாக் செயலியில் ஒழுக்க கேடான மற்றும் அநாகரிகமான விடீயோக்கள் வெளியாவதாக கூறி, பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையம் அந்த செயலிக்கு தடை விதித்துள்ளது. சமூகத்தில் பல்வேறு தரப்பினர்…

மேலும்...

கோவிட் தடுப்பூசி அனைவருக்கும் இலவசம்! கத்தார் அரசு அதிரடி அறிவிப்பு

தோஹா (06 நவம்பர் 2020): கொரோனா வைரஸுக்கான நிவாரண தடுப்பூசி, கத்தார் நாட்டில் வசிக்கும் அனைவருக்கும் முற்றிலும் இலவசம் என்று கத்தார் அரசு இன்று அதிரடியாக அறிவித்துள்ளது. கத்தார் நாட்டின் பொது சுகாதார அமைச்சகம் (Ministry of Public Health) இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இச் செய்தி இடம் பெற்றுள்ளது. கோவிட்-19 தடுப்பூசிகளுக்காக புகழ் பெற்ற Pfizer மற்றும் BioNTech நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது கத்தார். Pfizer நிறுவனம் நடத்திவரும் தடுப்பூசிக்கான மருத்துவப் பரிசோதனைகள், இம்மாத இறுதியில்…

மேலும்...

அதிபர் ட்ரம்ப், அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் இடையே தரை லோக்கலில் நடந்த காரசார விவாதம்!

நியூயார்க் (30 செப் 2020): அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் இடையே தரை லோக்கலில் காரசாரமாக விவாதம் நடைபெற்றுள்ளது அமெரிக்காவில் வரும் நவம்பர் 3ஆம் தேதியன்று அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதில், ரிபப்ளிகன் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து டெமாக்ட்ரடிக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன் போட்டியிடுகிறார். அமெரிக்காவில் தேர்தலுக்கு முன் அதிபர் வேட்பாளர்கள் நேரடியாக விவாதம் செய்வது மரபு….

மேலும்...

ஆம்..!முஸ்லிம்களை கொன்று குவித்தது உண்மையே! – அதிர வைக்கும் “இராணுவ வீரர்களின் வாக்குமூலம்!”

ஜெனீவா (10 செப் 2020): ரோஹிங்கிய முஸ்லிம்களை கொன்று குவித்தது உண்மைதான் என்று அந்நாட்டு ராணுவ வீரர்கள் அளித்திருக்கும் வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகையே அதிர வைத்த சம்பவம் மியான்மர் ரோஹிங்யா முஸ்லிம்கள் இனப்படுகொலைகள். பல லட்சம் ரோகிங்யா முஸ்லிம்கள் அகதிகளாக குற்றுயிரும் குலை உயிருமாக நாடுவிட்டு நாடு ஓடிப்போனார்கள்.அப்படிப் போனவர்களில் மியான்மர் ராணுவத்தால் இனப்படுகொலை செய்யப்பட்டவர்கள் பல்லாயிரக்கணக்கானோர். இது தொடர்பாக திஹேக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இந்த இனப்படுகொலை தொடர்பாக வழக்கு நடைபெற்று வருகிறது. காம்பியா…

மேலும்...

கின்னஸ் பதக்கம் வென்ற உலகின் நீளமான சைக்கிள் பாதை!

கத்தார் (06 செப். 2020): கால்பந்து விளையாட்டுப் போட்டிகளுக்குப் புகழ்பெற்ற கத்தார் நாடு, உலகின் மிக நீளமான ஒலிம்பிக் சைக்கிள் சாலைக்காக கின்னஸ் பதக்கம் வென்றுள்ளது. கத்தார் நாட்டின் தலைநகரான தோஹாவில் துவங்கி, அல்கோர் நகரம் வரையில் இந்த சைக்கிள் சாலை நீண்டுள்ளது. இது சைக்கிள் ஓட்டிகளுக்காக மட்டுமே அமைக்கப்பட்ட பிரத்யேக சாலையாகும். இதில் பிற வாகனங்களுக்கு அனுமதி இல்லை. 33 கி.மீ நீளமும், 7 மீட்டர் அகலமும் கொண்ட இச்சாலை, ஒலிம்பிக் விளையாட்டை நோக்கமாகக் கொண்டு…

மேலும்...

கப்பல் தீ விபத்தால் இலங்கைக்கு ஆபத்து!

கொழும்பு (04 செப் 2020): சரக்கு கப்பலில் ஏற்பட்டுள்ள தீ விபத்தால் இலங்கைக்க்கு பேராபத்து காத்திருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குவைத்தின் மினா அல் அஹ்மாதி துறைமுகத்தில் இருந்து கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி புறப்பட்ட சரக்கு கப்பல், இந்தியாவின் பாரதீப் துறைமுகத்தை செப்டம்பர் 5 ஆம் தேதி அடையும் இலக்குடன் பயணம் மேற்கொண்டிருந்தது. இலங்கையின் கிழக்கு கடல் பகுதியில் இருந்து 38 கடல் மைல் தொலைவில் கப்பல் வந்து கொண்டிருந்தபோது அதில் தீ பற்றி…

மேலும்...

25 நாடுகளுக்கான விமான சேவையை மீண்டும் துவங்கும் சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ்!

ரியாத் (03 செப் 2020) சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ் மூலம் தனது விமானங்களில் வெளிநாடுகளிலிருந்து திரும்பும் பயணிகளுக்கு ஏழு நிபந்தனைகளை விதித்துள்ளது, 25 நாடுகளிலிருந்து சவூதி திரும்புபவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், சவூதி சுகாதார அதிகாரிகள் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுமாறு சவூதி அரேபியன் விமான நிறுவனம் பயணிகளுக்கு உத்தரவு பிறப்பித்ட்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், ஓமான், பஹ்ரைன், எகிப்து, லெபனான், மொராக்கோ, துனிசியா, சீனா, யுனைடெட் கிங்டம், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ்,…

மேலும்...

கொரோனா பாதிப்பால் 8.67 லட்சம் பேர் பலி!

ஜெனீவா (03 செப் 2020): உலக அளவில் கொரோனா பாதிப்பால் இதுவரை 8.67 லட்சம் பேர் பலியாகியுள்ளனர். சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில்,…

மேலும்...

கோமாவிலிருந்து மீண்டாரா அதிபர்? – என்ன நடக்குது உலகில்?

வடகொரியா (27 ஆக 2020): கோமாவில் இருந்ததாக கூறப்பட்ட வடகொரிய அதிபர் கிம் ஜாங் கலந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை குறித்து வதந்திகள் பரவிவந்த நிலையில், அதிகாரிகள் அளவிலான கூட்டம் ஒன்றில் அவர் பங்கேற்ற புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. வடகொரிய அதிபரான கிம் ஜாங் இருதய நோய்க்கு ஆளாகி, அதன் காரணமாகக் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவருக்கு அறுவைசிகிச்சை செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. மேலும்,…

மேலும்...