ஜெனீவா (03 செப் 2020): உலக அளவில் கொரோனா பாதிப்பால் இதுவரை 8.67 லட்சம் பேர் பலியாகியுள்ளனர்.
சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 2,61,77,535 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 68 லட்சத்து 72 ஆயிரத்து 247 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர். சிகிச்சை பெறுபவர்களில் 60 ஆயிரத்து 705 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. வைரஸ் பாதிப்பில் இருந்து 1,84,42,208 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனாவால் இதுவரை 8,67,347 பேர் உயிரிழந்துள்ளனர்.