ஏற்கனவே கொரோனா பாதித்தவருக்கு மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு!

ஹாங்காங் (25 ஆக 2020): கொரோனா வைரஸ் பாதித்தவருக்கு மீண்டும் அதே பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஹாங்காங் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் ஸ்பெயினுக்கு சென்று ஹாங்காங்கிற்குத் திரும்பிய 33 வயதான ஒரு நபருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாகவும், அவருக்கு ஏற்கனவே மார்ச் மாதத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தாகவும அவர்கள் தெரிவித்துள்ளனர். அவருக்கு முதல் முறையாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டபோது லேசான அறிகுறிகள் இருந்தன, இரண்டாவது முறையாக தாக்கியபோது எந்த அறிகுறியும் இல்லை; ஹாங்காங் விமான…

மேலும்...
Neelagiri-Student

இத்தாலியில் மருத்துவம் பயின்று வந்த தமிழக மாணவர், தற்கொலை!

ரோம்  (22 ஆக. 2020): நீலகிரி மாவட்டம், கீழ்க்கோத்தகிரி பகுதியைச் சேர்ந்தவர் சதானந்த். ஒரு தேயிலை விவசாயி. இவருடைய இரண்டாவது மகன் பிரதிக்ஷ் வயத 21! இத்தாலியிலுள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மருத்துவம் பயின்று வந்துள்ளார். இவருடைய சகோதரரும் இத்தாலியிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கெமிக்கல் இன்ஜினீயராகப் பணியாற்றி வருகிறார். சகோதரர் வசிக்கும் பகுதிக்கும், இவரது அறைக்கும் நீண்ட தொலைவு என்பதால் பிரதிக்ஷ் கல்லூரி அருகில் தனி அறை எடுத்துத் தங்கி, படித்துவந்தார்….

மேலும்...

ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி குறித்து உலக சுகாதார மைய்யம் குழப்பம்!

மாஸ்கோ (14 ஆக 2020): சில தினங்களுக்கு முன்னால் ரஷ்ய அதிபர் புதின் கொரோனா வைரசுக்கு எதிரான புதிய தடுப்பூசியை நாங்கள் கண்டுபிடித்துவிட்டோம் என்றும், அதைத் தன்னுடைய மகளுக்குச் செலுத்தி சோதனை செய்ததாகவும் அறிவித்தார். ஆனால் உலக சுகாதார நிறுவனத்தின் மூத்த ஆலோசகரான புருஸ் அய்ல்வர்ட் இது குறித்துக் கூறும் போது, “ரஷ்யாவின் தடுப்பூசி குறித்தான உறுதித்தன்மை மற்றும் நம்பகத்தன்மை குறித்து தற்போது எந்தத் தகவலும் கூற முடியாது. அது குறித்தான எந்த விவரமும் எங்களிடம் இல்லை….

மேலும்...

கொரோனா குறித்த 70 லட்சம் போலி பதிவுகள் நீக்கம் – ஃபேஸ்புக் அதிரடி நடவடிக்கை!

நியூயார்க் (14 ஆக 2020): கொரோனா குறித்த 70 லட்சம் போலி பதிவுகளை ஃபேஸ்புக் நிறுவனம் நீக்கம் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது, ஃபேஸ்புக் நிறுவனம் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் பதிவுகளை மிகவும் கண்காணித்து வருகிறது. அதனடிப்படையில், போலி பதிவுகள், வெறுப்பூட்டும் பதிவுகள் ஃபேஸ்புக் நிறுவனத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லும் பட்சத்தில் அவை நீக்கம் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கோவிட் 19 குறித்த தவறான பதிவுகள் மற்றும் போலியான மருத்துவ ஆலோசனைகள் உள்ளிட்டவைகள் என 70…

மேலும்...

இம்ரான்கான் மீது ஜாவித் மியான்தத் பாய்ச்சல்!

இஸ்லாமாபாத் (14 ஆக 2020): பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் கிரிக்கெட் குறித்து அறியாதவர்களை அதிகாரிகளாக நியமித்திருப்பதாக இம்ரான் கான் மீது முன்னாள் கேப்டன் ஜாவித் மியாண்தத் குற்றம் சாட்டியுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக மியாண்தத் விளையாடியபோது இம்ரான் கான் ஆல்ரவுண்டராக பாகிஸ்தான் அணிக்காக விளையாடியவர். சக வீரர்களாகவும், நண்பர்களாகவும் இருவரும் இருந்து வந்த நிலையில் தற்போது இம்ரான்கான் பாகிஸ்தானின் பிரதமராக உள்ளார். இந்நிலையில் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தில், கிரிக்கெட் பற்றிய எந்த விசயங்களும் அறியாத நபர்களை…

மேலும்...

முதல் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு – ரஷ்ய அதிபர் புதின் அறிவிப்பு!

மாஸ்கோ (11 ஆக 2020): முதல் கொரோனா தடுப்பு மருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை பொதுமக்களுக்கு இடுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார். பல்வேறு கட்ட சோதனைகள் முடிந்துள்ள நிலையில் இதுவே கொரோனாவுக்கான உலகின் முதல் தடுப்பு மருந்து என்றும் அறிவித்துள்ள புதின், இதுவே கொரோனாவுக்கான உலகின் முதல் தடுப்பு மருந்து என்றும், தேவையான அனைத்து பரிசோதனைகளும் முடிந்துவிட்டதாக புதின் கூறுகிறார். தனது மகளுக்கு முன்பே இந்த தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டுவிட்டதாகக் கூறியுள்ளார். மேலும்…

மேலும்...
Amit Sha-Goebbels

இந்துத்துவாவும் உலக பயங்கரவாதமும் : ஓர் ஒப்பீடு – பகுதி-7

பொய்யான தகவலை பரப்புதல் : ஹிட்லரின் மிக நெருங்கிய நண்பர் கெப்பல்ஸ். 1924ஆம் ஆண்டு ஹிட்லரால் ஈர்க்கப்பட்டு நாஜிக் கட்சியில் சேர்ந்தவர். ஹிட்லரின் உதடுகளாகப் பணிபுரிந்தவர். மிகச் சிறந்த ராஜதந்திரி என்ற பெயரைப் பெற்றவர். நாஜிக்களால் ஹிட்லருக்கு அடுத்த இடத்தில் வைத்து மதிக்கப்பட்டவர். நாஜிக் கட்சியின் பிரச்சார பீரங்கியாக செயல்பட்டவர், யூத ஒழிப்புத் திட்டத்தை ஹிட்லர் மேற்கொண்ட காலத்தில், விஷயம் வெளியில் பரவாமல் இருப்பதற்காக தினசரி ஏதாவது புதிய பிரச்சனையின்பால் மக்களின் கவனத்தை திசைத் திரப்பி, பல…

மேலும்...
Aatish Taseer

பிரதமர் மோடி-யின் கடும் விமர்சகருக்கு குடியுரிமை வழங்கியது அமெரிக்கா..!

வாஷிங்டன்(ஜூலை 31):இந்திய வம்சா வழியைச் சேர்ந்தவரான ஆதிஷ் தசீர், அமெரிக்காவின் நியூயார்க்கை மையமாக கொண்ட எழுத்தாளரும் பத்திரிகையாளருமாவார். இவருக்கு கடந்த திங்களன்று அமெரிக்க குடியுரிமை அளிக்கப்படடிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மோடி அரசாங்கம் இவரது வெளிநாட்டு குடியுரிமை (OCI) Overseas Citizenship of India அட்டையை ரத்து செய்த சில மாதங்களுக்குப் பிறகு, அமெரிக்கா அந்நாட்டின் குடியுரிமையை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய அரசு அவரது OCI-ரத்து செய்ததற்கு கூறிய காரணம், அவர் அடிப்படை ஆதாரங்களை சமர்பிக்க தவறியது மற்றும் அவரது…

மேலும்...
Rebeka Koha

மதம் மாறினார் உலகப்புகழ் பெற்ற பளு தூக்கும் வீராங்கனை..!

ரிகா-லாத்வியா (28 ஜூலை 2020):லாத்வியா நாட்டை சேர்ந்த உலகப்புகழ் பெற்ற பளு தூக்கும் வீராங்கனையான ரெபெகா கொஹா (Rebeka Koha), தான் இஸ்லாத்தைத் தழுவிவிட்டதாக இன்று அறிவித்திருக்கிறார். 2016 ஒலிம்பிக் போட்டிகளில் நான்காவது இடத்தையும், ஜுனியர் உலக சாதனைகளுக்கும் உரிமையாளரான ரெபெக்கா, லாத்வியா அரசின் ‘வளர்ந்து வரும் நட்சத்திரம்’ விருதையும் பெற்றவராவார். “இன்று என் வாழ்க்கையின் மிகப்பெரிய முடிவை எடுத்திருக்கிறேன். மிகவும் மகிழ்ச்சியாக உணரும் அதே நேரம் சரியான முடிவையே எடுத்திருக்கிறேன் என்பதையும் உங்களுக்கு கூற விரும்புகிறேன்….

மேலும்...

டொனால்ட் டரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு கொரோனா வைரஸ் பாஸிட்டிவ்!

வாஷிங்டன் (28 ஜூலை 2020): அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ’பிரையன் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார். ஒரு குடும்ப நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்பு ஓ’பிரையன் கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருந்ததை அடுத்து அவருக்கு செய்யப்பட்ட சோதனையில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து அவர் தனிமைப் படுத்தப்பட்டுள்ளார். மேலும் அவர் தேசிய பாதுகாப்பு நடவடிக்கைகளை வீட்டில் இருந்தபடியே கவனித்து வருகிறார். ஓ’பிரையன் சமீபத்தில் ஐரோப்பாவிலிருந்து திரும்பினார், இங்கிலாந்து,…

மேலும்...