சென்னை (09 ஏப் 2020): பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், கடுங்கோபத்தில் சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மானின் கோபத்தின் பின்னணி இதுதான்.
கடந்த 8 வருடங்களுக்கு முன்பு இந்தியில் வெளியாகி சக்கை போடு போட்ட ‘டெல்லி 6’ என்ற திரைப்படத்தில் வரும் ‘மஸக்கலி’ என்ற பாடலின் ரீமிக்ஸ் வெர்சனாக, கொரோனா வைரஸால் லாக்டவுனாக இருக்கும் இத்தருணத்தில் யூடுபில் வெளியாகி அதிவேகத்தில் வைரலாகி வருகிறது. அந்த ரீமிக்ஸ் பாடலை எதிர்த்துதான் ஏ.ஆர்.ரஹ்மான் பதிலடி கொடுத்துள்ளார்.
தானிஷ் பக்ஜி என்பவர் அந்த பாடலை ரீமிக்ஸ் செய்துள்ளார். இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ள, ஏ.ஆர்.ரஹ்மான், “இந்த பாடலின் ஒரிஜினல் வெர்சனுக்கு பல இரவுகள் உறங்காமல் 200 க்கும் அதிகமான இசைக் கலைஞர்களுடன் இணைந்து இந்த பாடலை உருவாக்கினோம், மேலும் இதனை முறையாக படம்பிடித்து வெளியிட்டுள்ளோம். இந்த பாடலுக்காக எந்த குறுக்கு வழியையும் நாங்கள் தேடவில்லை. அதற்காக உழைத்தவர்களுக்கு நன்றி” என பதிவிட்டு அந்த பாடலின் ஒரிஜினல் லிங்கையும் பதிந்துள்ளார்.
மேலும் ‘யார் தனது கோபத்தை கட்டுப்படுத்த முடியுதோ அவரே கடினமாக மனிதர்’ என்றும் இன்ஸ்டாகிராமில் பதிந்துள்ளார். இதன்மூலம் அந்த பாடலுக்காக எந்த அளவில் உழைத்திருப்பார். ஆனால் இலகுவாக ரீமிக்ஸ் செய்து சிலர் பெயரை தட்டிச் சென்று விடுகின்றனர். என்பதை அது உணர்த்துகிறது.
மற்றொரு இசையமைப்பாளரான அனிருத்தும் ஏ.ஆர்.ரஹ்மானின் பதிவை ஆதரித்து பதிவிட்டுள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மானின் இந்த ட்வீட்தான் பாலிவுட்டில் தற்போதைய ஹாட் டாக்.