பிக்பாஸ் பிரபலம் கொரோனா பாதிப்பால் மரணம்!

Share this News:

கொல்லம் (01 பிப் 2021): மலையாள பிக்பாஸ் பிரபலம் சோம்தாஸ் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.

மலையாள பாடகரான சோம்தாஸ், மோகன்லால் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2-வது சீசனில் கலந்துகொண்டு பிரபலமானார். 42 வயதாகும் சோம் தாசுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, அவர் கொல்லத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், நேற்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சோம்தாசின் மறைவு மலையாள திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலர் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Share this News:

Leave a Reply