புதுடெல்லி (01 பிப் 2021): மீண்டும் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
டெல்லி மாநில காங்கிராஸ் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம், நேற்று நடந்தது. கூட்டத்துக்குப் பின், மாநில தலைவர் அனில்குமார் கூறியதாவது:
“நாட்டில் மிகவும் ஆபத்தான அரசியல் சூழல் நிலவுகிறது. நரேந்திர மோடி தலைமையிலான அரசு, அடுத்தடுத்து தவறான முடிவுகளை எடுத்து வருகிறது. இதை எதிர்த்து, ராகுல் தொடர்ந்து போராடி வருகிறார்.
ஜனநாயக விரோத சக்திகளை விரட்டவும், காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில், ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தவும், ராகுலை உடனடியாக, காங்., தலைவராக அறிவிப்பதே சிறந்த வழி. இதற்கான தீர்மானம், கட்சி , நிர்வாகிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.இவ்வாறு, அவர் கூறினார்.