மும்பை (12 ஜன 2020): பிரபல பாலிவுட் நடிகர் சயிஃப் அலி கானின் மகளும் பாலிவுட் நடிகையுமான சாரா அலி கானின் கையில் ரசிகர் ஒருவர் முத்தமிட முயன்றுள்ளார்.
மும்பையின் பிரபல புகைப்படக் கலைஞர் வைரல் பயானி தன் இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் இச்சம்பவத்தின் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
ரசிகர்களுடன் இணைந்து சாரா அலி கான் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது ரசிகர் ஒருவர் திடீரென சாராவின் கையில் முத்தமிட முயன்றுள்ளார்.
உடனே அவர் பாதுகாவலர்களால் அப்புறப் படுத்தப்பட்டார். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.