சீக்கிரம் வா பாலு – இளையராஜா உருக்கம் -வீடியோ!

Share this News:

சென்னை (14 ஆக 2020): எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்க, இளையராஜா உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கொரோனா தொற்றால் சிகிச்சை மேற்கொண்டு வந்த எஸ்பி பாலசுப்ரமணியம் உடல் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் இளையராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “சீக்கிரம் வா பாலு, நீ விரைவில் வீடு திரும்புவாய் என எதிர் பார்கிறேன். நம் நட்பு சாதாரமானதல்ல. நமக்குள் சண்டை இருந்தாலும் அதில் நட்பு இருக்கும், இந்த நட்பு இசையும் பாடலையும் போன்று அவ்வாறு பிரிக்க முடியாதது. விரைவில் திரும்பி வா பாலு” என்று பேசியுள்ளார்.


Share this News:

Leave a Reply