அண்ணாத்தவை தொடர்ந்து புதிய படத்தில் நடிக்கும் ரஜினி!

Share this News:

சென்னை (24 நவ 2021): பேட்ட படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி மீண்டும் நடிப்பார் என்று தகவல் பரவி வருகிறது.

ரஜினிகாந்த் நடித்து தீபாவளி பண்டிகையில் திரைக்கு வந்த அண்ணாத்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் இதுவரை ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்து இருப்பதாக படக்குழுவினர் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில் ரஜினிகாந்த் புதிய படத்தில் நடிக்க தயாராவதாகவும் படப்பிடிப்பு அடுத்த மாதம் இறுதியில் தொடங்கப்படலாம் என்றும் தகவல் பரவி உள்ளது.

சமீபத்தில் ரஜினிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். தற்போது பூரண குணமடைந்து அடுத்த படத்தில் நடிக்க தன்னை தயார்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. ரஜினியின் புதிய படத்தை இயக்கப் போவது யார் என்ற பரபரப்பான எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ஏற்கனவே துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமியை அழைத்து ரஜினி பாராட்டி தனக்கு கதை தயார் செய்யும்படி கூறியிருந்தார். எனவே அவரது இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. பின்னர் டாக்டர், பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிப்பார் என்று பேசப்பட்டது. ஆனால் பீஸ்ட் படப்பிடிப்பு முடியாததால் ரஜினி படத்தை உடனே தொடங்குவது முடியாத காரியம் என்கின்றனர்.


Share this News:

Leave a Reply