மும்பை (18 ஜன 2020): கார் விபத்தில் இந்தி நடிகை ஷபானா ஆஸ்மி படுகாயம் அடைந்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பை-புனே அதிவேக நெடுஞ்சாலை கலபூர் டோல் பிளாசா அருகே சென்று கொண்டிருந்த நடிகை ஷபானா ஆஸ்மியின் கார் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காயமடைந்த ஷபானா ஆஸ்மி,பன்வேலில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் அவரது கணவர் ஜாவித் அக்தாரும் சென்றுள்ளார். எனினும் அவருக்கு காயம் எதுவும் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று (சனிக்கிழமை) மாலை 03;30 க்கு விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.