மும்பை (26 ஜன 2020): என் வீட்டில் இதுவரை எங்கள் மதம் குறித்து விவாதித்ததே இல்லை என்று நடிகரி ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.
இந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் குடியரசு தின தொலைக் காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது பல சுவாரஸ்ய தகவல்களை தெரிவித்தார்.
அப்போது “நான் முஸ்லிம் மதத்தவன் என் மனைவி இந்து மதத்தைச் சேர்ந்தவள், என் பிள்ளைகள் பள்ளிச் சான்றிதழில் என்ன மதம் குறிப்பிட வேண்டும் என்று கேட்டபோது இந்தியன் என்று குறிப்பிடச் சொன்னேன்” என்றார்.
மேலும் எங்கள் வீட்டில் எங்கள் மதங்கள் குறித்து விவாதித்ததே இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.