ஜித்தா (02 டிச 2022): பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் உம்ரா செய்வதற்காக புனித மக்காவிற்க்கு சென்றுள்ளார்.
மக்கா வந்துள்ள ஷாரூக்கானுடன் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் செல்ஃபிக்கள் எடுத்துள்ளனர். அல்லாஹ் அவருடைய பிரார்த்தனைகளைக் கேட்பானாக. அவருக்கும் அவரது குடும்பத்துக்கும் சிறந்தவை வரட்டும்’ -என்று அவரது ரசிகர் ஒருவர் சமூக வலைதளத்தில் பதிந்துள்ளார்.
ஷாருக் கான் முன்பு ஒரு பேட்டியில் ஹஜ் செய்ய வேண்டும் என்பது தனது மிகப்பெரிய ஆசை என்றும், தனது மகன் ஆப்ராம் மற்றும் மகள் சுஹானாவுடன் ஹஜ் செய்ய விரும்புவதாக தெரிவித்திருந்தார்.