சென்னை (05 ஆக 2020): பிரபல் திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கொரோனா வைரஸால் பாதிக்கப் பட்டுள்ளார்.
உலகை அச்சுறுத்தும் கொரோனா, இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்களையும் விட்டு வைக்க வில்லை.
இந்நிலையில் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகள் இருப்பதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது தான் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக எஸ். பி. பாலசுப்ரமணியன் வீடியோ வெளியிட்டுள்ளார்