கோவா (03 டிச 2022): இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) சர்வதேச போட்டி நடுவர் குழுவில் பணியாற்றிய BAFTA வெற்றியாளரான ஜின்கோ கோடோ, தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் குறித்த நடவ் லாபிட்டின் கூற்றுடன் நாங்களும் ஒத்துப்போகிறோம் என தெரிவித்துள்ளார்.
அவருடன் மற்ற இரண்டு உறுப்பினர்களும் லாபிட்டின் கருத்தில் உடன்படுகிறார்கள் என்பதை வெள்ளிக்கிழமை வெளிப்படுத்தினார்.
ஜூரிகள் Pascale Chavance, Javier Angulo Barturen மற்றும் Gotoh ஆகியோர் கையொப்பமிட்ட ஒரு அறிக்கை அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
சனிக்கிழமையன்று, தி காஷ்மீர் ஃபைல்ஸ் மீதான நடுவர் மன்றத்தின் கருத்து ஒருமனதாக இருந்தது என்பதை தெளிவுபடுத்தும் வகையில், கூட்டறிக்கை கூறியது:
#IFFI #IFFI53Goa #IFFI2022 #KashmirFiles @IndiaToday @TimesNow @TOIIndiaNews @ndtv @News18India @IndianExpress @htTweets pic.twitter.com/TIAjTyEgdb
— Jinko Gotoh (@JinkoGotoh) December 2, 2022
“விழாவின் நிறைவு விழாவில், நடுவர் மன்றத்தின் தலைவர் நடவ் லாபிட், நடுவர் மன்ற உறுப்பினர்கள் சார்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டார்: அதில், இந்த விழாவில் பங்கேற்ற15வது படமான தி காஷ்மீர் ஃபைல்ஸால் நாங்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தோம், இது ஒரு மோசமான பிரச்சாரத் திரைப்படமாக எங்களுக்குத் தோன்றியது. மதிப்புமிக்க திரைப்பட விழாவின் கலைப் போட்டிப் பிரிவுக்கு காஷ்மீர் ஃபைல்ஸ் பொருத்தமற்றது. எங்களது கூற்றில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என்றார்..