சென்னை (03 டிச 2022): திமுகவை எதிர்த்து பாஜக எகிறி அடித்துக் கொண்டு உள்ள நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்த்து போராட திமுக தயாராகி வருகிறது.
இதனை கருத்தில் கொண்டு 40 தொகுதிகளையும் கைபற்ற வேண்டும் என்று திமுக முனைப்போடு செயலாற்ற தொடங்கிவிட்டது.
ஏற்கனவே கமல்ஹாசன் திமுக கூட்டணியில் இணையவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் அடுத்த இலக்கை நோக்கி திமுக நகர தொடங்கியுள்ளது. வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் இப்போது கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுடன் மேலும் 2 கட்சிகள் இணைய வாய்ப்புள்ளதாக கட்சி நிர்வாகிகள் சொல்கிறார்கள்.. குறிப்பாக, கமலின் மநீம,தவிர விஜயகாந்தின் தேமுதிக இரண்டு கட்சிகளும் கன்பார்ம்மாக திமுக கூட்டணியில் இடம்பெறக்கூடும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.
அதேவேளை பாமகவும் திமுகவுடன் இணைய தயாராகி வருகிறது. பாஜகவை இத்தனை காலமும் எதிர்பார்த்து, அமைச்சர் பதவி கிடைக்காத நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற பாமக ஆர்வம் காட்டுவதாக தெரிகிறது..
ஆனால், வாக்கு வங்கியை பிரதானமாக நிர்ணயிக்கக்கூடிய விசிக, திமுக கூட்டணியில் உள்ளதால், பாமகவை உள்ளே சேர்ப்பதில் திமுக தயக்கம் காட்டுவதாக தெரிகிறது. ஆனால் மக்கள் நீதி மய்யம் மற்றும் தேமுதிகவுக்கு இந்த பிரச்சனை இல்லை. வலுவிழந்து போயுள்ள தேமுதிக, வரும் எம்பி தேர்தலில் திமுக கூட்டணியில் சேர்ந்து போட்டியிட்டால் தான், கூட்டணி பலத்துடன் வெற்றி பெற்று பாராளுமன்றத்துக்குள் முதல் முறையாக காலடி எடுத்து வைக்க முடியும் என்று கட்சிக்காரர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறதாம்.. மேலும், தொடர் தோல்வியால் துவண்டு கிடக்கும் கட்சிக்கும் வரப்போகும் தேர்தல் ஒரு சவாலாக அமையும் என்கிறார்கள்..