வாரிசு – முதல் விமர்சனம்

Share this News:

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்பங்கள் கொண்டாடும் வெற்றிப் படத்தை கொடுக்க பெரிய முயற்சி செய்துள்ளார் இயக்குநர் வம்சி பைடிபைலி.

விஜய் ரஷ்மிகா மந்தானா நடிப்பில் வந்துள்ள வாரிசு படத்தை முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் பலர் பலவிதமான விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

வாரிசு தந்தைக்கும் மகனுக்கும் இடையே இருக்கும் உறவை பற்றியும், தாய்க்கும் மகனுக்கும் இடையே இருக்கும் உறவை பற்றியும் எடுத்துக்காட்டியுள்ளார். குறிப்பாக படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அற்புதமாக இருக்கிறது.

வாரிசு திரைப்படத்தில் விஜய்யின் நடிப்பு மிரட்டுகிறது. எமோஷனில் சிறப்பாக நடித்துள்ளார். படத்தின் கதை ஒன்றும் புதிதல்ல, ஆனாலும் விறுவிறுப்பாக திரைக்கதை நகர்கிறது. கதாநாயகி ராஷ்மிகா மந்தனா திரையில் அழகாக தெரிகிறார்.

பல இடங்களில் டிவி சீரியலை நினைவுபடுத்துவதை தவிர்க்க முடியவில்லை. செகண்ட் ஹாஃப் செல்லும் வேகத்திற்கு இணையாக முதல் பாதி இன்னமும் மெருகேற்றப்பட்டிருந்தால் மேலும், சிறப்பாக இருந்திருக்கும்.

ஆனால் ஆக்‌ஷன், காமெடி, ஆட்டம் பாட்டம், சென்டிமென்ட் என பக்கா பேக்கேஜ் ஆக இந்த படம் விஜய் ரசிகர்களை குறி வைத்து உருவாகி உள்ளது. ஒளிப்பதிவாளர் கார்த்திக் பழனியின் கேமரா ஒர்க் நிச்சயம் ரசிகர்களை தியேட்டரில் ஆச்சர்யப்படுத்துகிறது.

பாடல்கள் ஏற்கனவே ஹிட்டடித்துள்ள நிலையில் ரஞ்சிதமே பாடலில் விஜய்யின் டான்ஸ் அமர்க்களம்.

படத்தின் முதல் பாதியை இன்னும் குறைத்து இருக்கலாம். அது படத்திற்கு சற்று குறையாக அமைய வாய்ப்பு. துணை நடிகர், நடிகைகள் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.

விஜய் ரசிகர்களுக்கு நல்ல விருந்து இந்த வாரிசு


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *