12 தப்லீக் ஜமாஅத்தினர் சிறைக்கு அனுப்பி வைப்பு!

Share this News:

ஷாஜஹான்பூர் (01 மே 2020): உத்திர பிரதேசத்தில் கொரோனா தனிமைப் படுத்தலுக்குப் பிறகு 12 தப்லீக் ஜமாஅத்தினர் தாற்காலிக சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதி வேகத்தில் பரவி வருகிறது. இதில் தப்லீக் ஜமாஅத்தினர் சிலரும் கொரோனாவால் பாதிக்கப் பட்ட நிலையில், தாய்லாந்தை சேர்ந்த 9 பேர் மற்றும் தமிழகத்தை சேர்ந்த 2 பேர் அரசின் உத்தரவை மீறியதாகக் கூறி அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு தற்போது தற்காலிக சிறைக்கு அனுப்பப் பட்டனர்.

தப்லீக் ஜமாஅத்தினர் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், 12 பேரும் பரிசோதனைக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. பின்பு அதிகாரிகள் அவர்களை கண்டுபிடித்து கொரோனா சோதனை மேற்கொண்டதில் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இதனை அடுத்து அனைவரும் 28 நாட்கள் தனிமைப் படுத்தப்பட்டனர். அவர்களின் குவாரண்டைன் காலம் முடிந்த நிலையில் தற்போது தற்காலிக சிறைக்கு அனுப்பப் பட்டுள்ளனர். ஏற்கானவே அவர்களது பாஸ்போர்ட் உள்ளிட்டவைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து வெளியுறவுத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Share this News: