துபாய் (01 மே 2020): ஐக்கிய அரபு அமீரக தனியார் நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு சரியான நேரத்தில் ஊதியம் வழங்கப்படுகிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தொழிலாளர் அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரக தொழிலாளர் ஒப்பந்தங்களின் அடிப்படையில் ஊதியங்கள் வழங்கப்படுவதை நிறுவன முதலாளிகள் உறுதி செய்ய வேண்டும் என்று ஐக்கிய அரபு அமீரக தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது. புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா பரவல் காரணமாக வெளிநாட்டினர் முன் கூட்டியே விடுப்பில் செல்ல விரும்பும் பட்சத்தில், ஏற்கனவே பிறப்பிக்கப் பட்ட உத்தரவின்படியும், அவரவர்களின் நிறுவன அறிவுறுத்தலின்படியும் விண்ணப்பிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.