கைக் குழந்தையுடன் டாக்சியில் பயணித்த பெண் கூட்டு வன்புணர்வு – குழந்தை படுகொலை!

மும்பை (11 டிச 2022): மும்பையில் இளம்பெண் கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரது பத்து மாதப் பெண் குழந்தையும் படுகொலை செய்யப்பட்டுள்ளது. மும்பையின் அகமதாபாத் நெடுஞ்சாலையில் மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் தனது கைக்குழந்தையுடன் ஒரு பெண் டாக்சியில் ஏறினார். அந்த டாக்சியில் ஏற்கனவே 4 பேர் இருந்துள்ளனர். சிறிது தூரம் சென்றபின்னர், டாக்ஸி டிரைவர் மற்றும் அதில் இருந்த 4 பேர் அந்த பெண்ணைக் கூட்டு வன்புணர்வு செய்துள்ளனர். அத்துடன் குழந்தையைத் தூக்கி எறிந்தும்…

மேலும்...

நாங்க ஒன்றாகத்தான் இருப்போம் – ஒரே ஆணை மணந்த இரட்டை சகோதரிகள்!

மும்பை (05 டிச 2022): மும்பை அந்தேரியை சேர்ந்தவர் அதுல் உத்தம். இவர் டிராவல் ஏஜென்சி நடத்தி வருகிறார். காந்திவலியை சேர்ந்தவர்கள் பிங்கி, ரிங்கி. இரட்டையர்களான இச்சகோதரிகள் இரண்டு பேரும் தகவல் தொழில் நுட்பத்துறையில் பொறியியல் படிப்பு படித்துவிட்டு ஒரே கம்பெனியில் வேலை செய்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இரட்டையர்களின் தந்தை இறந்து போனார். இதையடுத்து இருவரும் தாயாரின் பராமரிப்பில் வசித்து வந்தனர். அப்போது, அவர்களின் தாயார் விபத்தில் சிக்கிய போது அவரை மருத்துவமனைக்கு அழைத்து…

மேலும்...

ஹிஜாபுக்கு இங்கு அனுமதி உண்டு – மும்பை கல்லூரி விளக்கம்!

மும்பை (10 பிப் 2022): மும்பை கல்லூரி ஒன்றில் ஹிஜாப் தடை என்ற சர்ச்சைக்கு கல்லூரி நிர்வாகம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. ‘ஹிஜாப், குங்காட், தாவணி போன்றவற்றை அணிந்த பெண் மாணவிகள் கல்லூரி வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவதில்லை’ என்று மும்பையில் உள்ள ஒரு கல்லூரி தனது விதிமுறைகளில் எழுதியதாக சர்ச்சை எழுந்தது. தற்போது அதற்கு விளக்கம் அளித்துள்ள கல்லூரி நிர்வாகம், விதிகள் தவறாகப் புரிந்து கொள்ளப்படுவதாக கூறியுள்ளது. கல்லூரி அறிக்கைகளின்படி, மும்பையின் மாட்டுங்கா பகுதியில் உள்ள எம்எம்பி ஷா கல்லூரியின்…

மேலும்...

ஐஐடி மாணவர் கல்லூரி மடியிலிருந்து குதித்து தற்கொலை

மும்பை (17 ஜன 2022): மும்பையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி) மாணவர் கல்லூரி வளாகக் கட்டிடத்தின் ஏழாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். உயிரிழந்தவர் 26 வயதுடைய இரண்டாம் வருட முதுகலைப் பயிலும் மாணவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவர் திங்கள் கிழமை அதிகாலை 4.30 மணியளவில் வளாக கட்டிடத்தின் ஏழாவது மாடியில் இருந்து குதித்ததாக கூறப்படுகிறது. அவரது தங்கும் விடுதியில் இருந்து தற்கொலைக் கடிதம் ஒன்றையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். அந்தக் குறிப்பில்,…

மேலும்...

இன்று முதல் ஜனவரி 7 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு!

மும்பை (30 டிச 2021): பெருகிவரும் கோவிட் பரவலை அடுத்து மும்பையில் 144 தடை உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் ஜனவரி 7ம் தேதி வரை தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மும்பை போலீஸ் கமிஷனர் பிறப்பித்துள்ளார். இ௹ஆ உத்தரவின்படி புத்தாண்டு கொண்டாட்டங்கள் மற்றும் கூட்டங்களுக்கு அனுமதி இல்லை. ஹோட்டல்கள், உணவகங்கள், பார்கள், விடுதிகள், ஓய்வு விடுதிகள் மற்றும் கிளப்புகளில் எந்த நிகழுகளுக்கும் அனுமதி இல்லை. மீறுபவர்கள் மீது தொற்று நோய்கள் சட்டம் பிரிவு 188ன்…

மேலும்...

ஸ்டேட் வங்கியில் பணம் கொள்ளை – ஊழியர் கொள்ளையர்களால் சுட்டுக் கொலை -VIDEO

மும்பை (30 டிச 2021): மும்பையில் ஸ்டேட் வங்கிக் கொள்ளையின் போது ஊழியர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். மும்பை SBI-யின் தஹிசார் கிளையில் நேற்று மாலை 3.30 மணியளவில் இரண்டு பேர் வங்கியில் கொள்ளையடிக்க வந்தனர். அப்போது சந்தேஷ் கோமர்(25) என்ற ஊழியர் வங்கிக்கு வெளியே இருந்தார். இரண்டு பேர் டவலால் முகத்தை மூடிக்கொண்டு வங்கிக்குள் வருவதைக் கண்டு சந்தேகமடைந்த சந்தேஷ் அவர்களை தடுத்து நிறுத்தினார். உடனே கொள்ளையர்களில் ஒருவன் சந்தேஷின் மார்பில் துப்பாக்கியால் சுட்டான். அவர்…

மேலும்...

ஒமிக்ரான் பரவலைத் தடுக்க மும்பையில் 144 தடை உத்தரவு!

மும்பை (11 டிச 2021): மகாராஷ்டிரா மாநிலத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஒமிக்ரான் அச்சத்தால் மும்பையில் இன்றும் நாளையும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது மகாராஷ்டிராவில் ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்ததை அடுத்து மும்பை மாநகரில் டிசம்பர் 11 மற்றும் 12ம் தேதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒமிக்ரான் தொற்று மேலும் பரவாமல் இருக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து ஊர்வலங்கள், பேரணிகள், சமுதாய நிகழ்ச்சிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும்...

ஆறடி இடைவெளி அவசியம் – காதலர் தினத்தில் போலீஸ் அதிரடி!

மும்பை (14 பிப் 2021): கோவிட் மீது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆறடி இடைவெளியுடன் காதலர் தினம் கொண்டாட மும்பை போலீசார் உத்தரவிட்டுள்ளனர். இதுகுறித்து மும்பை போலீசார் வெளியிட்டுள்ள ட்வீட்டர் பதிவில், “தூரம் அன்பை வலிமையாக்குகிறது, உங்கள் காதல் முகமூடி மற்றும் ஆறு அடி தூரம் இதுவே எங்களுக்கு தேவை ” என்று மும்பை காவல்துறை ட்விட்டரில் தெரிவிக்கபப்ட்டுள்ளது. .

மேலும்...

ஆடைக்கு மேல் பெண்ணின் மார்பை தொடுவது குற்றமல்ல – மும்பை நீதிமன்ற தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தால் நிறுத்திவைப்பு!

புதுடெல்லி (27 ஜன 2020): ஆடைக்கு மேல் பெண்ணின் மார்பை தொடுவது பாலியல் குற்றமல்ல என்ற மும்பை உயர் நீதிமன்ற உத்தரவை டெல்லி உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு மகாராஷ்டிராவை சேர்ந்த 39 வயது   நபர். பக்கத்து வீட்டைச் சேர்ந்த 12 வயது சிறுமியை  மார்பகங்களை ஆடையோடு சேர்த்து அழுத்தி பாலியல் ரீதியாக அத்துமீறல் செய்துள்ளார். இது தொடர்பாக குற்றவாளிக்கு எதிராக மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளையில் வழக்கு நடைபெற்றது. குற்றவாளியை…

மேலும்...

ஆடைக்கு மேல் பெண்ணின் மார்பை தொடுவது பாலியல் குற்றமல்ல – நீதிமன்றம் பகீர் தீர்ப்பு!

மும்பை (25 ஜன 2021): ஆடைக்கு மேல் பெண்ணின் மார்பை தொடுவது பாலியல் குற்ற வழக்கில் சேராது என்று மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு மகாராஷ்டிராவை சேர்ந்த 39 வயது   நபர். பக்கத்து வீட்டைச் சேர்ந்த 12 வயது சிறுமியை  மார்பகங்களை ஆடையோடு சேர்த்து அழுத்தி பாலியல் ரீதியாக அத்துமீறல் செய்துள்ளார். இது தொடர்பாக குற்றவாளிக்கு எதிராக மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளையில் வழக்கு நடைபெற்றது. குற்றவாளியை போஸ்கோ சட்டத்தின்கீழ் நடவடிக்கை…

மேலும்...