புதுடெல்லி (04 மார்ச் 2020): இத்தாலியிலிருந்து இந்தியா வந்த 15 சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா வைரஸ் நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் வுகான் நகரில் இருந்து கொரோனா வைரஸ் பரவிய இந்த நோய் 60-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. தற்போது ஈரானிலும் கொரோனா வைரஸ் அதிக அளவில் பரவி வருகிறது. சீனாவில் பலி எண்ணிக்கை 3000-க்கும் மேலாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் டெல்லி மற்றும் தெலுங்கானாவை சேர்ந்த தலா ஒருவருக்கு கொரோனா இருப்பதை மத்திய அரசு உறுதி செய்தது. மேலும் பெங்களூரை சேர்ந்த மென்பொருள் பொறியாளருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இது இப்படியிருக்க இத்தாலியிலிருந்து இந்தியாவிற்கு சுற்றுலா வந்த பயணிகள் 15 பேருக்கு கொரோனா பாஸிட்டிவ் ரிசல்ட் வந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.