புதுடெல்லி (26 டிச 2020): குடியரசு தினம் மற்றும் அணிவகுப்பில் பங்கேற்கவுள்ள 150 வீரர்களுக்கு கொரோனா சோதனையில் பாசிட்டிவ் எனபது உறுதியாகியுள்ளது.
அணிவகுப்புக்கான பயிற்சிக்காக டெல்லி வந்த சில வீரர்களுக்கு , பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக கோவிட் பரிசோதிக்கப்பட்டபோது அவர்களுக்கு கோவிட் பதித்திருப்பது கண்டறியப்பட்டதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
சுமார் ஆயிரம் வீரர்கள் மீது இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பலருக்கு எந்த அறிகுறிகளும் இல்லை. இந்நிலையில் கோவிட் உறுதிப்படுத்தியவர்கள் சிறப்பு கண்காணிப்பு மையத்திற்கு மாற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அணிவகுப்பை பாதுகாப்பாக நடத்த கடுமையான நெறிமுறைகள் முன் வைக்கப்பட்டுள்தாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஜனவரி 26 ஆம் தேதி ராஜ்பாத்தில் அணிவகுப்பு நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். பிரதமர் விருந்தினராக பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சனை இந்தியா அழைத்திருந்தது. இருப்பினும், பிரிட்டனில் புதிய கொரோனா வைரஸ் பரவி வருவதால் அவர் இந்தியாவுக்கு வருவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.