பாட்னா (11 நவ 2020): பீகார் சட்டமன்றத் தேர்தலில் பத்தொன்பது முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர் . அவர்களில் ஐந்து பேர் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) ஐச் சேர்ந்தவர்கள்.
இதற்கிடையில், தேசிய ஜனநாயக கூட்டணி (என்.டி.ஏ) தேர்தல்களில் பெரும்பான்மையைப் பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.
இந்திய தேர்தல் ஆணையம் பீகார் சட்டமன்றத் தேர்தலின் முடிவுகளை புதன்கிழமை காலையில் அறிவித்தது, பாஜக போட்டியிட்ட 110 இடங்களில் 74 இடங்களில் வென்றது, ஜேடி (யு) தான் போட்டியிட்ட 115 இடங்களில் 43 இடங்களைப் பெற்றது.
Akhtarul Iman Amour AIMIM
Abidur Rahman Araria Congress
Md Anzar Nayeemi Bahadurganj AIMIM
Syed Ruknuddin Ahmed Baisi AIMIM
Mahboob Alam Balrampur CPI-ML(L)
Md Zaman Khan Chainpur BSP
Md Kamran Gobindpur RJD
Shahnawaz Jokihat AIMIM
Shakeel Ahmed Khan Kadwa Congress
Md Israil Mansuri Kanti RJD
Md Afaque Alam Kasba Congress
Izharul Hussain Kishanganj Congress
Md Izhar Asfi Kochadhaman AIMIM
Shamim Ahmed Narkatia RJD
Ali Ashraf Siddiqui Nathnagar RJD
Mohammad Nehaluddin Rafiganj RJD
Akhtarul Islam Shaheen Samastipur RJD
Yusuf Salahuddin Simri Bakhtiarpur RJD
Saud Alam Thakurganj RJD
ஆர்.ஜே.டி யின் வாக்குப் பங்கு 23.03 சதவீதமாக பதிவாகியுள்ளது, இது தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் இல்லாத அதிகபட்சமாகும். அதைத் தொடர்ந்து பாஜக 19.5 சதவீதமும், ஜேடியு, காங்கிரஸ் முறையே 15.4 சதவீதமும், 9.5 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளன.