புதுடெல்லி (10 மார்ச் 2020): ஜோதிராதித்யா சிந்தியா மற்றும் அவரது ஆதரவாளர்கள் எம்.எல்.ஏக்கள் 19 பேர் காங்கிரஸிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.
காங்., ஆட்சி நடக்கும் முதல்வர் கமல்நாத் தலைமையிலான அமைச்சரவையில் ஆறு அமைச்சர்கள், 10 எம்.எல்.ஏ.,க்கள் என 16 பேர், மூன்று சிறப்பு விமானம் மூலம், மத்திய பிரதேசத்தின் போபால் நகரிலிருந்து புறப்பட்டு, பெங்களூருக்கு சென்றனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன், தனியார் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுனர்.
இதற்கிடையே இருக்கும் ஜோதிராதித்யா சிந்தியா, டில்லியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் இன்று திடீர் திருப்பமாக சந்தித்து பேசி உள்ளார்.
பின்பு அவர் காங்கிரஸிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் 19 எம்.எல்.ஏக்களும் விலகுவதாக அறிவித்ததால் காங்கிரஸ் பெரிய சரிவை சந்தித்துள்ளது.
இதற்கிடையில் மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் தனது ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.