தெஹ்ரான் (10 மார்ச் 2020): கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஈரானில் இருக்கும் சிறைக் கைதிகளை விடுவிக்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது.
கொரோனா வைரஸ் சீனாவுக்கு அடுத்த நிலையில் இத்தாலி, ஈரான் உள்ளிட்ட நாடுகளில் அதிகமாக பரவி வருகிறது. இதனால் ஈரான் நாட்டு அரசு சில அதிரடி முடிவுகளை எடுக்க வேண்டிய நிலையில் உள்ளது.
இதன் ஒரு பகுதியாக ஈரான் நாட்டில் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் சுமார் 70 ஆயிரம் சிறைக் கைதிகளை விடுதலை செய்ய அந்நாட்டு தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதேவேளை அவர்களால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் மீண்டும் சிறையிலடைக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.