சேலம் (20 பிப் 2020): அவிநாசிதேசிய நெடுஞ்சாலையில் கேரள அரசு பேருந்தும்- கண்டெய்னர் லாரியும் மோதிக்கொண்டதில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
சேலத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழா நோக்கிச் சென்று கொண்டிருந்த கேரள அரசு சொகுசு பேருந்தும் கேரளாவில் இருந்து சேலம் நோக்கி வந்து கொண்டிருந்த கண்டெய்னர் லாரியும் அவிநாசி அருகே நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பெண்கள் உட்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 23 பேர் காயமடைந்தனர்.
அவிநாசி காவல் துறையினர், தீயணைப்பு துறையினர் விபத்தில் சிக்கியவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் 6 பேர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.