புதுடெல்லி (19 மார்ச் 2020): ஈரான், இத்தாலி உள்ளிட்ட வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களில் 276 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிபடுத்தப்பட்டு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பால் உலக அளவில் பலியானோர் எண்ணிக்கை 9000 த்தை நெருங்கி உள்ளது. இந்தியாவில் இதுவரை 169 பேர் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர். 3 பேர் பலியாகியுள்ளனர். மேலும், வைரஸ் அறிகுறியுடன் உள்ள 5,700 பேர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் உலக அளவி இதுவரை 276 இந்தியர்கள் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர். அதிக அளவில் ஈரானில் 255 இந்தியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.