சென்னை (19 மார்ச் 2020): சிஏஏவை எதிர்த்து ததஜ சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் இணைந்து நேற்று சென்னையில் பேரணி நடத்தினர்.
குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டை தவிர தமிழகத்தின் பல பகுதிகளில் டெல்லி ஷாஹீன் பாக் மாடலில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவி வருவதால் அரசின் உத்தரவை ஏற்று, போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைக்க பல இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் கூட்டாக கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்ற தமிழத்தின் பல பகுதிகளில் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப் பட்டது.
எனினும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் நேற்று பேரணியில் ஈடுபட்டனர்.