டெல்லி கலவரத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது!

Share this News:

புதுடெல்லி (24 பிப் 2020): டெல்லியில் ஏற்பட்ட திடீர் கலவரத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.

போலீஸ் தலைமை காவலர் உட்பட நான்கு பேர் கொல்லப் பட்டுள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நடைபெறும் மஜ்பூர் மற்றும், ஃபாஃப்ராபாத் பகுதிகளில், குடியுரிமை ஆதரவாளர்கள் என்கிற பெயரில் வன்முறையாளர்கள் புகுந்ததால் இரு தரப்பினரிடையே மோதல் வெடித்தது.

இதில் டெல்லி தலைமை கான்ஸ்டபில் மற்றும் பொதுமக்கள் உட்பட நான்கு பேர் பலியாகியுள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். தொடர்ந்து டெல்லி போர்க்களமாகவே காட்சி அளிக்கிறது.

ஞாயிறன்று டெல்லி பாஜக தலைவர் கபில் மிஸ்ரா போராட்டக் காரர்களை நாங்களே அப்புறப்படுத்துவோம் என்றும் போலீஸை கண்டுகொள்ள மாட்டோம் என்றும் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply