கவுஹாத்தி (26 ஜன 2020): இந்தியாவின் குடியரசு தினமான இன்று அஸ்ஸாமில் ஐந்து இடங்களில் குண்டு வெடிப்பு நடந்துள்ளது.
அஸ்ஸாமின் திபுர்காரில் 2 இடங்களிலும், சோனரி, துலியாஜன் மற்ரும் தூம்தூமா ஆகிய இடங்களிலும் குண்டு வெடித்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று மாநில போலீஸார் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக அஸ்ஸாம் முதல்வர் சர்பானந்த சோனோவல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ள கண்டன பதிவில், “குண்டு வெடிப்புச் சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. மக்கள் தீவிரவாதக் குழுக்களை புறக்கணித்ததன் விரக்தியில் இந்தப் புனித நாளில் தீவிரவாதிகள் இதுபோன்ற கோழைத்தனமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்த குண்டு வெடிப்புச் சம்பவங்களில் தொடர்புடையவர்கள் விரைவில் கண்டறியப்பட்டு அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
முன்னதாக, 8 தடை செய்யப்பட்ட குழுக்களைச் சேர்ந்த 644 பேர் குவஹாட்டியில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.