புதுடெல்லி (26 மார்ச் 2020): டெல்லியின் மௌஜ்பூரில், ஒரு மருத்துவருக்கு கொரோனா வைரஸ் பாதித்திருப்பதை அடுத்து 800 பேர் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் திட்டமிடுகிறது. ஸ்பெயின், இத்தாலி மற்றும் அமெரிக்காவில் நிலைமை மிகவும் தீவிரமாகிவிட்டது. ஸ்பெயினின் கொரோனாவினால் ஒரே நாளில் 700 பேர் இறந்தனர்.
வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த 22ம் தேதி, நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கை கடைபிடிக்க பிரதமர் மோடி வலியுறுத்தினார். இதனை தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், வைரஸ் பரவுவது மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில் பிரதமர் மோடி நாட்டுக்கு மக்களிடம் உரையாற்றிய போது நேற்று நள்ளிரவு 12 மணி முதல் நாடு முழுவதும் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அடுத்த 21 நாட்களுக்கு பொதுமக்கள் யாரும் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என தெரிவித்தார்.
இந்நிலையில் வடகிழக்கு டெல்லியில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, மார்ச் 12 -முதல் 18 வரை மௌஜ்பூரில், உள்ள கிளினிக்கிற்குச் சென்ற பார்வையாளர்கள் சுமார் 800 பேர் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.. மேலும், தனிமைப்படுத்தலுக்கான காலத்தின் போது கொரோனா வைரஸ் அறிகுறிகள் ஏற்பட்டால் மருத்துவரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்