9 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த பாஜக தலைவர் கைது!

Share this News:

கண்ணூர் (17 எப் 2020): கேரளாவில் 9 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் பா.ஜ.க தலைவர் பத்மராஜனை போலிஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டம் திருப்பங்கோட்டூர் பாலதாயி பள்ளியின் ஆசிரியர் பத்மராஜன். இவர் பா.ஜ.கவின் தேசிய ஆசிரியர் சங்கத்தின் தலைவராக உள்ளார். இவர் மீது 9 வயது சிறுமியின் தாயார் போலீசில் புகார் அளித்தார்.

அதில்,பத்மராஜன் பாலதாயி பள்ளியில் படிக்கும் தனது 9 வயதான குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல், எனது குழந்தையைப் போல் பள்ளியில் படிக்கும் பல குழந்தைகளை பாலியல் வன்கொடுமையும், பாலியல் அத்துமீறலும் செய்துள்ளார். இதுவரை இதுதொடர்பாக சம்பந்தபட்ட பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும், சம்பவம் நடைபெற்ற அன்று, சிறப்பு வகுப்பு இருப்பதாக அழைத்துச் சென்று பள்ளியின் குளியல் அறையில் குழந்தையை பாலியல் வல்லுறவில் ஈடுபடுத்தியுள்ளார். இந்த சம்பவத்தை தலசேரி துணை போலீஸ் சூப்பிரண்டு வேணுகோபால் விசாரித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து , குழந்தைகள் பாதுகாப்பு மைய அதிகாரிகள் பாதிக்கப்பட்ட குழந்தையின் வீட்டிற்குச் சென்று குழந்தையிடம் வாக்குமூலம் பெற்றனர். மேலும் மருத்துவ பரிசோதனை செய்யவும் உத்தரவிட்டனர். குழந்தைக்கு செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனையில், குழந்தை பாலியல் வல்லுறவுக்கு ஆளானது உறுதியானது.

எனினும் பத்மராஜன் மீது பல புகார்கள் அளிக்கப்பட்டும் போலீஸ் நடவடிக்கை எடுக்காமலேயே இருந்தது. இததையடுத்து இதுகுறித்த புகார் கேரள முதல்வருக்கு சென்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த முதல்வர், உடனே பத்மராஜனை போக்ஸோ சட்டத்தின் கீழ் குற்றவாளியை கைது செய்ய உத்தரவிட்டார்.

அதற்குள் பத்மராஜன் தலைமறைவாக, அவரை தனிப்படை அமைத்து போலிஸார் தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று முன் தினர் பதமராஜனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் கைது நடவடிக்கையை தாமதப்படுத்திய போலீசார் மீதும் நடவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Share this News:

Leave a Reply