ஆதார் அட்டை பெற்று பத்தாண்டுகள் முடிவடைந்தால் ஆதாரை புதுப்பிக்க வேண்டும் – மத்திய அரசு!

Share this News:

புதுடெல்லி (10 நவ 2022): ஆதார் வழங்கப்பட்டு பத்தாண்டுகள் நிறைவடைந்தால் ஆதாரை உரிய ஆவணங்களை ஆதாரை புதுப்பிக்கும் வகையில் மத்திய அரசு விதிகளில் திருத்தம் செய்துள்ளது.

அடையாள மற்றும் முகவரி சான்று உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தல்களில் கூறப்பட்டுள்ளது. மத்திய அரசின் அறிவிப்பின்படி, ஆதாரின் துல்லியத்தை உறுதி செய்வதே இந்தத் திருத்தத்தின் நோக்கமாகும்.

ஆதார் அட்டையைப் பெற்று 10 ஆண்டுகள் முடிந்த நிலையில், அதற்கான ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். துணை ஆவணங்கள் அடையாளச் சான்று, முகவரிச் சான்று ஆகியவற்றை பதிவு செய்யும் வகையில் புதிய திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply