புதுடெல்லி (05 மே 2020): கோதுமை பாக்கெட்டுக்குள் பணத்தை வைத்து ஏழைகளுக்கு உதவியதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திக்கு நடிகர் அமீர்கான் மறுப்பு தெரிவித்துள்ளார்.
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் உணவுக்கு பெரிதும் திண்டாடுகின்றனர்.
இந்நிலையில் நடிகர் சமூக ஊடகங்களில் ஒரு தகவல் பரவியது. அதில் கோதுமை பாக்கெட்டுக்குள் ரூ 15000 ரூபாய் வைத்திருப்பதாக அந்த செய்தியில் விளக்கப்பட்டது. மேலும் இதனை நடிகர் அமீர்கான் தான் செய்தார் என்றும் தகவல் பரவியது.
இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள நடிகர் அமீர்கான், “அப்படி எதுவும் நான் செய்யவில்லை. இதுபோன்ற செய்தியிலேயே பொய்யானது என்பது தெளிவாகவில்லையா? கோதுமை பாக்கெட்டுக்குள் பணம் வைக்க நான் என்ன ராபின் ஹூட்டா?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.