அஹமதாபாத் (12 டிச 2022): குஜராத்தில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
நடந்து முடிந்த குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. காங்கிரஸ் 17 இடங்களில் வெற்றி பெற்றது. இம்முறை போட்டியிட்ட ஆம் ஆத்மி 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
இந்நிலையில் எதிர் பார்த்த வெற்றி கிடைக்காத்தால் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து வெற்றி பெற்ற ஆம் ஆத்மி எம்.எல்.ஏ பூபத் பயானி அப்படி எதுவும் இல்லை என்று மறுத்துள்ளார். அதேவேளை மக்களின் கருத்துக்கு உட்பட பாஜகவில் இணைய வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.