சென்னை (12 டிச 2022): ஓ.பன்னீர் செல்வத்திற்கு எதிராக எடப்பாடி அணியின் பெண் நிர்வாகி தமிழ்ச்செல்வி ராமசாமி வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவி்ல் ஒற்றைத் தலைமை மோதல் காரணமாக ஓபிஎஸ் – ஈபிஎஸ் என அதிமுக இரண்டாகப் பிளவுபட்டுள்ளது. இதனையடுத்து பொதுக்குழுவைக் கூட்டி அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமியை நீக்குவதாக ஓபிஎஸ் அறிவித்தார். இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு செல்லுமா செல்லாதா என்ற வழக்கு தற்போது உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி இருவரும் மாறி மாறி எதிரணி ஆதரவாளர்களை இழுக்கும் படலம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாற்று அணியில் இருந்து வருபவர்களுக்கு ஓபிஎஸ் அணியில் முக்கிய பதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. எடப்பாடி அணியில் இருந்து வருபவர்களுக்கு மாவட்ட செயலாளர் உள்பட அனைத்து மட்டங்களிலும் பதவி கொடுத்து வருகிறார் ஓபிஎஸ். மேலும், பொதுக்குழு உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி இருவரும் மாறி மாறி எதிரணி ஆதரவாளர்களை இழுக்கும் படலம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாற்று அணியில் இருந்து வருபவர்களுக்கு ஓபிஎஸ் அணியில் முக்கிய பதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. எடப்பாடி அணியில் இருந்து வருபவர்களுக்கு மாவட்ட செயலாளர் உள்பட அனைத்து மட்டங்களிலும் பதவி கொடுத்து வருகிறார் ஓபிஎஸ். மேலும், பொதுக்குழு உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
எடப்பாடி பழனிசாமி அணியில் பொறுப்பில் இருக்கும் தமிழ்ச்செல்வி ராமசாமிக்கு, ஓபிஎஸ் அணியில் பதவி வழங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழ்ச்செல்வி ராமசாமி, தான் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியில், ஆர்பி உதயகுமார் வழியில் செயல்பட்டு வருவதாகவும், தன்னைக் கேட்காமலேயே ஓபிஎஸ் அணியில் தன்னை நிர்வாகியாக அறிவித்துள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக ஓபிஎஸ் தரப்புக்கு கண்டனம் தெரிவித்து ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், “ஐயா வணக்கம், நான் செல்லம்பட்டி அதிமுக ஒன்றிய துணை செயலாளர் தமிழ்ச்செல்வி ராமசாமி பேசுகிறேன். நான் எப்போதும் எடப்பாடி பழனிசாமி தலைமையில், முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வழியிலும், செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் ராஜா வழியிலும் கட்சிப் பொறுப்பில் உள்ளேன். என்னை ஓபிஎஸ் அணியில், செல்லம்பட்டி ஒன்றிய இணை செயலாளராக நியமித்ததை வன்மையாக கண்டிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.