அஹமதாபாத் (09 மார்ச் 2020): குஜராத் பல்கலைக்கழக கல்லூரி மாணவர் சங்க தேர்தலில் காங்கிரஸ் மாணவ அமைப்பு வெற்றி பெற்றுள்ளது.
குஜராத் பல்கலைக் கழக மாணவர் சங்க தேர்தலில் பாஜக ஆதரவு பெற்ற சங்கமான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மற்றும் காங்கிரஸின் நேஷனல் ஸ்டூடண்ட்ஸ் யூனியன் ஆஃப் இந்தியா ஆகியவை போட்டியிட்டன.
இந்த தேர்தலில் 8 பதவிகளில் 6 பதவிகளை காங்கிரஸ் கட்சியின் நேஷனல் ஸ்டூட்ண்ட்ஸ் யுனியன் ஆஃப் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
தற்போது மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் குறிப்பாக மாணவ சமுதாயத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அத்துடன் அமித்ஷா அறிவித்துள்ள தேசிய குடிமக்கள் பட்டியல், மற்றும் பாஜக அரசின் மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுக்கும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனை பிரதிபலிப்பதாகவே இந்த தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன என்று காங்கிரஸ் மாணவர் அமப்பினர் தெரிவித்தனர்.