குஜராத்தில் பாஜக மாணவர் அணி (ஏபிவிபி) படுதோல்வி!

Share this News:

அஹமதாபாத் (26 ஜன 2020) குஜராத் மத்திய பல்கலைக் கழக தேர்தலில் போட்டியில்ட்ட அனைத்து ஏபிவிபி மாணவர்களும் படுதோல்வி அடைந்துள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில மத்திய பல்கலைக் கழக மாணவர்களுக்கான தேர்தல் நடைபெற்று நேற்று முடிவுகள் அறிவிக்கப் பட்டன.

இதில் போட்டியிட்ட பாஜகவின் மாணவர் அணியான ஏபிவிபி படுதோல்வி அடைந்துள்ளது. போட்டியிட்ட ஐந்து மாணவர்களும் தோல்வியை தழுவியுள்ளனர்.

இவர்களை எதிர்த்து போட்டியிட்ட பிஸ்ரா அம்பேத்கர் புஹ்லே மானவர்கள் அணி, மற்றும் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா மற்றும் இடது டெமாக்ரடிக் மாணவர்கள் அணியினர் வெற்றி பெற்றுள்ளனர்.

சிஏஏ, டெல்லி ஜே என் யூ மாணவர்கள் மீதான தாக்குதல்கள் ஏபிவிபிக்கு படுதோல்வியை தந்துள்ளன என்ற கருத்து நிலவுகிறது.


Share this News:

Leave a Reply