குடியரசு தினம் – ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கொடி ஏற்றினார்!

Share this News:

சென்னை (26 ஜன 2020): குடியரசு தினத்தை ஒட்டி, சென்னை கடற்கரை சாலையில் ஞாயிற்றுக்கிழமை சென்னை கடற்கரையில் தேசியக் கொடியை ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் ஏற்றினார்.

நாட்டின் 71-ஆவது குடியரசு தினம் நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. தமிழகத்திலும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதில், சென்னை மெரீனா கடற்கரை சாலையில் நடைபெறும் விழாவில் ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் காலை 8 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றினார்.

முப்படையினரின் அணிவகுப்பு மரியாதை, முப்படைகளின் ஊா்திகள், தமிழக அரசுத் துறைகளின் சாதனைகளைப் பறைசாற்றும் அலங்கார ஊா்திகளின் அணிவகுப்பு போன்றவை நடைபெறுகின்றன


Share this News:

Leave a Reply