புதுடெல்லி (11 ஏப் 2021): வாரணாசியில் உள்ள கயன்வாபி மசூதியின் இடத்தை ஆய்வு செய்ய இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி கழகத்திற்கு வாரணாசி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது அவசியமற்றது என்று (AIMPLB) அகில இந்திய முஸ்லீம் சட்ட வாரியம் தெரிவித்துள்ளது.
1991 சட்டத்தின்படி, 1947 இல் தற்போதுள்ள வழிபாட்டுத் தலங்கள் அப்படியே இருக்க வேண்டும். இந்த சட்டம் இருக்கும்போது, கியான்வாபி மசூதியின் இருப்பிடம் குறித்து ஆய்வு நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது அதிர்ச்சியூட்டும் வகையில் இருப்பதாகவும், இது 1991 சட்டத்திற்கு முரணானது என்றும் (AIMPLB) தெரிவித்துள்ளது.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவு சமூக மற்றும் அரசியல் தாக்கத்தில் பேரழிவை ஏற்படுத்தும் என்று அந்த அவ்வமைப்பு தெரிவித்துள்ளது. இது வெறுப்பு அரசியலை ஊக்குவிக்கும் என்று அது தெரிவித்துள்ளது. . நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக கியான்வாபி மஸ்ஜித் கமிட்டி நடத்தி வரும் சட்டப் போராட்டத்திற்கு (AIMPLB) ஆதரவு தெரிவித்துள்ளது.