ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள கொரோனா வழிகாட்டுதல்கள்!

Share this News:

புதுடெல்லி (28 டிச 2022): ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் செவ்வாயன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து (யுஏஇ) இந்தியாவுக்குப் பயணிக்கும் பயணிகளின் கோவிட்-பாதுகாப்பு நடத்தை வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி அனைத்து பயணிகளும் தங்கள் நாட்டில் கோவிட்-19 க்கு எதிரான அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்று பரிந்துரை அறிவுறுத்துகிறது.

பயணத்தின் போது எடுக்க வேண்டிய மற்ற முன்னெச்சரிக்கைகளில் முகமூடிகளின் பயன்பாடு மற்றும் உடல் இடைவெளி ஆகியவை அடங்கும்.

கோவிட் -19 க்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியாவிற்கு சர்வதேச விமானங்களில் வரும் பயணிகளில் குறைந்தது இரண்டு சதவீதம் பேர் கோவிட் பரிசோதனைக்க்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் (MoCA) வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

இருப்பினும், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்தியா வருகையின்போது கோவிட் பரிசோதனை தேவையில்லை என்று வழிகாட்டுதல்கள் கூறுகின்றன.

குழந்தைகள் வருகையின் போது கோவிட்-19 நோய்க்கான அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டால், நெறிமுறையின்படி பரிசோதனை செய்து சிகிச்சை பெற வேண்டும்.


Share this News:

Leave a Reply