மும்பை (28 டிச 2022): நடிகை துனிஷா சர்மாவைத் தொடர்ந்து, சத்தீஸ்கரில் சோஷியல் மீடியா இன்ஃபுளூயன்சரான லீனா நாக்வன்ஷி என்ற இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்கரில் உள்ள கெலோ விகார் காலனியில் வசித்து வருபவர் லீனா நாக்வன்ஷி (22). இவர், ஒரு இன்ஸ்டா பிரபலம் ஆவார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் வைத்துள்ளார்.
அதில் பெரிய அளவில் பார்வையாளர்களை கவரவில்லை என்றாலும், இன்ஸ்டாவில் 10 ஆயிரம் பின்தொடர்புபவர்களை கொண்டுள்ளார். பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வரும் இவர், அவ்வப்போது செய்திகளிலும் வருவார்.
இவருக்கு ஒரு ஆண் நண்பர் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர் இன்று தனது வீட்டிலுள்ள மாடியில் உள்ள தனது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.
இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.