புதுடெல்லி (28 டிச 2022): கொரோனா பரவல் மீண்டும் தலைதூக்கியுள்ள நிலையில் மூக்குவழி கொரோனா தடுப்பு மருந்து விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.
மூக்கு வழியாக செலுத்தப்பபடும் கொரோனா தடுப்பூசி மருந்தின் விலை தனியார் மருத்துவமனைகளுக்கு 800 ரூபாய்க்கும், அரசு மருத்துவமனைகளுக்கு 325 ரூபாய்க்கும் வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
மூக்கு வழியாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் முறையை மேற்கொள்ளும் முதல் நிறுவனம் என்ற பெருமையை பாரத் பயோடெக் பெற்றுள்ளது.
இந்நிலையில், இன்கோவேக் என்ற மூக்கு வழி கொரோனா தடுப்பூசியின் விலை அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 4-வது வாரத்தில் இருந்து இந்த தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.