மும்பை (23 நவ 2019): மகாராஷ்டிராவின் சட்டமன்ற தேசியவாத காங்கிரஸ் தலைவர் பொறுப்பிலிருந்து அஜித் பவாரை நீக்கம் செய்து கட்சியின் தலைவர் சரத் பவார் நடவடிக்கை எடுத்துள்ளார்.
மகாராஷ்டிர அரசியலில் திடீர் திருப்பமாக இன்று காலையில் பாஜக – தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் திடீர் கூட்டணி அமைத்து ஆட்சியை ஏற்படுத்தின.
முதல்வராக பாஜகவின் தேவேந்திர பட்னாவீசும், துணை முதல்வராக தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவாரும் பொறுப்பேற்றுக் கொண்டார்கள்.
சிவசேனாவுக்கு தேசியவாத காங்கிரஸ் ஆதரவு தெரிவித்த நிலையில், இன்று ஏற்பட்ட அரசியல் திருப்பங்களுக்கு அஜித் பவாரின் தனிப்பட்ட முடிவே காரணம் என்று சரத் பவார் மற்றும் சிவசேனா கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
ஆட்சியமைப்பதற்கு முன்பாக தனது கட்சியின் 54 எம்எல்ஏ-க்களுடைய ஆதரவு கடிதத்தை அஜித் பவார் கவர்னர் கோஷ்யாரியிடம் வழங்கியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அவரை சட்டமன்ற கட்சி தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கி தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் நடவடிக்கை எடுத்துள்ளார்.