மும்பை (26 நவ 2019): மகாராஷ்டிர அரசியலில் மேலும் ஒரு திடீர் திருப்பமாக முதல்வர் மற்றும் துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பமாக அங்கு துணை முதல்வர் அஜித் பவார் ராஜினாமா செய்தார். அதனை தொடர்ந்து முதல்வர் பட்னாவிசும் ராஜினாமா செய்துள்ளார்.
உச்ச நீதிமன்றம் நாளை மாலைக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டி பாஜக அரசுக்கு உத்தரவிட்ட நிலையில் இருவரும் ராஜினாமா செய்துள்ளனர்..
இதற்கிடையே அஜீத் பவார் தற்போது எங்களுடன் இருக்கிறார் என்று சிவசேனா தெரிவித்துள்ளது.